இந்தியாவின் முதல் டபுள் டக்கர் ரயில் அகமதாபாத்-மும்பை ரயில் நிலையங்கள் இடையே நேற்று முதன்முதலாக இயக்கப்பட்டது. மத்திய ரயில்வே இணை அமைச்சர் பரத் சின் சோலன்கி கலுபூர் ரயில் நிலையத்தில் இருந்து ரயிலை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
குளிர்சாதன வசதி கொண்ட அதிவிரைவு டபுள் டக்கர் ரயிலில் 1,500 பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். பயணிகள் சொகுசாக பயணிக்கும் வகையில் ரயிலில் பல நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இதனால் டபுள் டக்கர் ரயிலில் பயணிப்பது ஒரு இனிய அனுபவமாக இருக்கும். மும்பையில் இருந்து 500 கி.மீ. தூரத்தில் உள்ள அகமதாபாத்திற்கு 7 மணிநேரத்தில் இந்த அதிவிரைவு ரயில் சென்று சேரும் என்று மேற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.