காற்றாலை மின்உற்பத்தி குறைவு: 14 மணிநேரம் மின்வெட்டு நீடிப்பு: குமுறும் மக்கள்

Posted By:
Subscribe to GoodReturns Tamil

மின்வாரியத்துறைக்கு ஏன் இந்த
செங்கோட்டை: தமிழகத்தில் தற்போது கடும் மின்வெட்டு நிலவி வருகிறது. சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 14 மணி நேரம் மின்வெட்டு நிலவி வருவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை காற்றாலை மூலம் அதிக அளவில் மின்சாரம் கிடைத்து வந்தது. தென்மேற்கு பருவக்காற்று நல்ல பலனை கொடுத்ததால் ஆரல்வாய்மொழி, முப்பந்தல், செங்கோட்டை, சுரண்டை, பாலக்காட்டு கணவாய் போன்ற பகுதிகளில் உள்ள காற்றாலைகள் மூலம் தினந்தோறும் சுமார் 3,000 மெகாவாட்டிற்கும் அதிகமாக மின்சாரம் கிடைத்தது.

குமரி மாவட்டம் முப்பந்தல், ஆரல்வாய்மொழியில் மட்டும் 6,000 காற்றாலைகள் உள்ளன. இங்கிருந்து 1,000 மெகாவாட் மின்சாரம் வரை பெறப்பட்டு வந்தது. இதனால் தமிழகத்தில் மின்வெட்டு நேரம் குறைந்து மக்கள் சற்று நிம்மதியாக இருந்தனர். இந்நிலையில் தற்போது காற்றின் வேகம் குறைந்துள்ளதால் 200 மெகாவாட் மின்சாரம் மட்டுமே காற்றாலைகள் மூலம் கிடைக்கின்றது.

திடீர் என்று காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததால் சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 14 மணிநேரம் வரை மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மின்சாரம் எப்பொழுது வரும், போகும் என்று தெரியாமலம் குமுறி வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

People fumes over 14 hrs power cut | மின்வாரியத்துறைக்கு ஏன் இந்த "கொலவெறி"? குமுறும் மக்கள்

Tamil Nadu people are asking power department as to what it has this much Kolaveri towards them. The state is reeling under severe power crisis so power department has left the people to suffer for 14 hrs a day without electricity.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns