ரயிலில் முதல் வகுப்பு-ஏசி வகுப்பு பயணத்திற்கு சேவை வரி: வரும் 1ம் தேதி முதல் அமல்

Posted By:
Subscribe to GoodReturns Tamil

ரயிலில் முதல் வகுப்பு-ஏசி வகுப்பு பயணத்திற்கு சேவை வரி அறிவிப்பு
டெல்லி: ரயிலில் ஏசி வகுப்பு மற்றும் முதல் வகுப்பு பயணத்திற்கான டிக்கெட்களுக்கு சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை வரி வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

ரயில்வே துறை அமைச்சர் சி.பி.ஜோஷி, நிதியமைச்சர் சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் ரயில்வே துறையின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு ஏசி வகுப்பு மற்றும் முதல் வகுப்பு டிக்கெட்களுக்கு சேவை வரி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி ஏ.சி வகுப்பு பயணக் கட்டணம் 3.708 சதவீதமும், முதல் வகுப்பு பயணக்கட்டணம் 7 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் சரக்குக் கட்டணம் 3.708 சதவீதமும், ரயில் நிலையங்களில் இதர சேவைகளை பயன்படுத்துபவர்களுக்கு 12.36 சதவீத கட்டண உயர்வும் அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த கட்டண உயர்வுகளின் மூலம் ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ.3,100 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கட்டண முறை வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Read more about: tax, ரயில், வரி
English summary

Service tax on AC and first class rail fares from Oct.1 | ரயிலில் முதல் வகுப்பு-ஏசி வகுப்பு பயணத்திற்கு சேவை வரி அறிவிப்பு

After a meeting between Railway Minister C.P.Joshi and Finance Minister P.Chidambaram, a decision was taken. Service tax will be levied on high end passenger classes, freight and auxiliary services rendered at railway stations from October 1.
Story first published: Thursday, September 27, 2012, 11:56 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns