22 தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்- கிருஷ்ணகிரி, திருப்பூர், புதுக்கோட்டைக்கு புதிய கலெக்டர்கள்

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தமிழகத்தில் 22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இலவசங்களுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு திட்ட அமலாக்கத்துறையின் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி, திருப்பூர், புதுக்கோட்டைக்கு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொழில்துறை செயலாராக இருக்கும் சுந்தரதேவன் ஓய்வு பெறுவதால் விக்ரம் கபூர் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஹட்கோ தலைவராக இருக்கும் ஹன்ஸ்ராஜ் வர்மா, சிறு-குறு தொழில்துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார்.

வேலை வாய்ப்புத் துறை இயக்குநராக பிரகாஷ், மாநில தேர்தல் ஆணைய செயலராக ஜோதி நிர்மலா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் கிரிஜா வைத்தியநாதன், ஜி.மதிவாணன்,என்.மகேசன் காசிராஜன், பி.சேவியர் கிறிஸ்ஸோ நாயகம், வி.எம். மோகன் ராஜ், குமார் ஜெயந்த், சித்ரஞ்சன் மோகன் தாஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேபேந்திர நாத் சாரங்கி விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: (முன்பு வகித்த பதவிகள் அடைப்புக்குறிக்குள்)

1. விக்ரம் கபூர்- முதன்மைச் செயலாளர் தொழில்துறை (தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவராக இருந்தவர்)
2. டாக்டர் பி.செந்தில்குமார்- சிறப்புச் செயலாளர், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை (போக்குவரத்து துறை ஆணையர்)
3. டாக்டர். ஜே.ராதாகிருஷ்ணன்- செயலாளர், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை (சிறப்பு திட்ட அமலாக்கத்துறை செயலாளர்)
4. ஜி.பிரகாஷ்- வேலைவாய்ப்புத் துறை இயக்குனர் (தொழில்துறை செயலாளர்)
5. என்.மதிவாணன்- இணைச் செயலாளர் தொழில்துறை (தமிழ்நாடு சர்க்கரை கழக இயக்குனர் மற்றும் நிர்வாக இயக்குனர்)
6. மகேஷன் காசிராஜன்- தமிழ்நாடு சர்க்கரைக் கழக இயக்குனர் மற்றும் நிர்வாக இயக்குனர் (வேலைவாய்ப்புத்துறை இயக்குனர்)
7. பி.ஜோதி நிர்மலா- செயலாளர், மாநில தேர்தல் ஆணையம் (சமூக நலத்துறை இயக்குனர்)
8. பி.எம்.சேவியர் கிரிஷோ நாயகம்- சமூகநலத்துறை இயக்குனர் (செயலாளர், மாநில தேர்தல் ஆணையம்)
9. டி.மோகன்ராஜ்- துணைச் செயலாளர், போக்குவரத்துறை (சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையர்-தெற்கு)
10. அனில் மேஷ்ராம்- இயக்குனர், விவசாய விற்பனை மற்றும் விவசாய வர்த்தகம் (மாநில திட்டக்குழு செயலாளர்)
11. ஜே.சந்திரகுமார்- இயக்குனர், நிலச் சீர்திருத்தம் (இந்து அறநிலையத்துறை ஆணையர்)
12. எம்.பாலாஜி- மாநில திட்டக் குழு செயலாளர் (விருதுநகர் மாவட்ட முன்னாள் கலெக்டர்)
13. ஹன்ஸ்ராஜ் வர்மா- சிறிய மற்றும் நடுத்தர நிறுவனத்துறை முதன்மை செயலாளர் (தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக்கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்)
14. குமார் ஜெயந்த்- மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குனர் மற்றும் செயலாளர் (செயலாளர், பொது மற்றும் மறுவாழ்வுத்துறை)
15. டாக்டர் சித்தரஞ்சன் மோகன் தாஸ்- செயலாளர், பொது மற்றும் மறுவாழ்வுத்துறை (மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குனர் மற்றும் செயலாளர்)
16. பூஜா குல்கர்னி- கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் (சென்னை மாநகராட்சி இணை ஆணையர் சுகாதாரம்)
17.ஜி.கோவிந்தராஜ்- திருப்பூர் மாவட்ட கலெக்டர் (ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குனர்)
18. எம்.மதிவாணன்- ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குனர் (திருப்பூர் மாவட்ட கலெக்டர்)
19. சி.மனோகரன்- புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் (கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர்)
20. வி.கலையரசி- கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர் (புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்)
21. எஸ்.ஜெயந்தி- கரூர் மாவட்ட கலெக்டர் (சென்னை மாவட்ட கலெக்டர்)
22. சி.என்.மகேஸ்வரன்- சென்னை மாநகராட்சி துணை ஆணையர் சுகாதாரம் (கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர்)

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TN government transfers IAS officers | 22 தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்-கிருஷ்ணகிரி, திருப்பூர், புதுக்கோட்டைக்கு புதிய கலெக்டர்கள்

The government has transferred and posted several IAS officers.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X