கொல்கத்தா: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு காரணமாக வர்த்தகம் பாதிக்கப்பட்ட தொலைத் தொடர்பு கருவிகள் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழியர்களின் ஊதியம் 25 சதவீதம் குறைக்கப்படவுள்ளது.
ஆ.ராசா மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது வழங்கப்பட்ட 122 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் ரத்து செய்தது. இதையடுத்து யூனினார் நிறுவனம் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது.
அதே போல எஸ் டெல், லூப் மொபைல், சிஸ்டமா ஷ்யாம் ஆகிய நிறுவனங்கள் தொலைத் தொடர்பு சேவைகள் தொடங்க தரப்பட்ட லைசென்ஸ்களும் ரத்தாயின.
இந்த நிறுவனங்கள் சீனாவின் முன்னணி தொலைத் தொடர்பு கருவிகள் தயாரிப்பு நிறுவனமான இசட்டிஈ (ZTE) நிறுவனத்தின் முக்கிய கிளையன்டுகள் ஆவர். இவர்களுக்கு லைசென்ஸ் கிடைக்காமல் போனதையடுத்து, இசட்டிஈ நிறுவனத்தின் ஆர்டர்களும் பெருமளவு குறைந்து, நிறுவனம் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளது.
இந்தியாவில் மட்டும் இந்த நிறுவனத்தில் சுமார் 1,600 பேர் பணியாற்றுகின்றனர். உலகின் 5வது மிகப் பெரிய தொலைத் தொடர்பு கருவிகள் தயாரிப்பு நிறுவனம் இசட்டிஈ என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது இந்தியாவின் இதன் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, ஊழியர்களின் ஊதியத்தை 25 சதவீதம் குறைக்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதே நேரத்தில் யாரையும் வேலையை விட்டு நீக்குவதில்லை என்ற முடிவிலும் உள்ளதாம் இந்த நிறுவனம். பரவாயில்ல..!


Click it and Unblock the Notifications