காலி இடங்களை கல்லூரிகளே நிரப்பி கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும்: மூட்டா கோரிக்கை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மதுரை: வருங்காலத்தில் கல்லூரிகளில் ஏற்படும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை அந்தந்த கல்லூரிகளே நிரப்பி கொள்ள உரிய ஆணை பிறப்பிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று மூட்டா பொதுச் செயலாளர் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து மூட்டா பொது செயலாளர் பேராசிரியர் த.மனோகர ஐஸ்டஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் 1.6.2008 முதல் நிரப்பப்படாமல் இருந்தன. இந்த பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று கல்லூரி ஆசிரியர் சங்கங்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து பல போராட்டங்களை நடத்தியது.

இந்த சூழலில் தமிழக முதல்வர் கடந்த 17.4.2012 அன்று தமிழக சட்டமன்ற உயர் கல்வி மானியக் கோரிக்கைக்கான விவாதத்தின் போது, தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 1.6.2008 முதல் 31.5.2011 வரை காலியாக உள்ள 3120 ஆசிரியர் பணியிடங்களை உயர்கல்வி நலன் கருதி உடனடியாக நிரப்பிட ஆணை பிறப்பிக்கப்படும் என்றார். இதை மூட்டா வரவேற்றது.

 

முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து கடந்த 28.5.2012 தேதியிட்ட அரசாணை எண்:79ஐ உயர் கல்வித்துறை வெளியிட்டது. இந்த அரசாணையில் ஒவ்வொரு பாடத்திற்கும் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநரகங்கள் வாரியாக நிரப்ப வேண்டிய 3120 ஆசிரியர் பணியிடங்களின் பட்டியல் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அரசாணை வெளியாகி 4 மாதங்களாகியும், ஆசிரியர் காலி பணியிடங்களை பாடம் வாரியாக ஒவ்வொரு கல்லூரியும் நிரப்ப அனுமதி வழங்கும் கல்லூரி கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்படவில்லை. இதனால் பல கல்லூரிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் அவதிப்படும் சூழ்நிலை நிலவுகிறது.

மாணவர் நலனை கருத்தில் கொண்டும், தமிழக உயர்கல்வி சிறப்பாக அமைந்திட உடனே ஆசிரியர் பணியிடங்களை உதவி பெறும் கல்லூரிகளில் நிரப்பும் அனுமதியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் வருங்காலங்களில் கல்லூரிகளில் ஏற்படும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை அந்தந்த கல்லூரிகளே உடனடியாக நிரப்ப உரிய ஆணை பிறப்பிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Colleges should allow to fill required vacancies: MUTA | காலி இடங்களை கல்லூரிகளே நிரப்பி கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும்: மூட்டா கோரிக்கை!

General Secretary of MUTA Prof.Manohara Justus has request TN government to allow all colleges to fill the vacancies of lectures in its own requirement.
Story first published: Saturday, September 29, 2012, 15:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X