நாட்டின் இரும்புத் தாது உற்பத்தி 18% சரிவு

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரும்புத் தாது  உற்பத்தி 18% சரிவு
மும்பை: நடப்பு நிதி ஆண்டில் இரும்புத்தாது உற்பத்தியானது 18 விழுக்காடு சரிவடைந்து உள்ளது. மேலும் ஏற்றுமதியும் சரிவடையக் கூடும்.

 

இது தொடர்பாக இந்திய கனிம நிறுவனங்கள் கூட்டமைப்பின் செயலாளர் ஆர்.கே. சர்மா கூறியதாவது:

உள்நாட்டு இரும்புத் தாது தேவை குறைந்து வருகிறது. அதே நேரத்தில் ஏற்றுமதியும் சரிவடைந்துவிட்டது. இதனால் இரும்புத் தாது உற்பத்தி குறையக் கூடும். இரும்புத் தாது உற்பத்திக்கு கோவா மாநிலம் தடைவிதித்திருப்பதுதான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

உள்நாட்டு விநியோகத்தை அதிகரிக்க கடந்த ஆண்டு இரும்புத்தாது ஏற்றுமதி மீதான வரி 20 முதல் 30 விழுக்காடு அதிகரிக்கப்பட்டது. இதனால் ஏற்றுமதி 36.7 விழுக்காடு சரிவடைந்து 6.18 கோடி டன்னாக குறைந்துள்ளது. இரும்புத் தாது ஏற்றுமதியில் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம்.

நடப்பு நிதி ஆண்டில் மொத்தம் 60 விழுக்காடு சரிவடைந்து சுமார் 2.50 கோடி டன்னாக குறையக் கூடும் என்றார் அவர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Iron ore output may dip 18% | இரும்புத் தாது உற்பத்தி 18% சரிவு

The recent move by the Goa government to ban iron ore mining is likely to hit the production of the mineral in the country during the current financial year.
Story first published: Sunday, September 30, 2012, 14:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X