முதலீட்டாளர்களின் ரூ.24 ஆயிரம் கோடி நிதியை திரும்ப கொடுக்கிறோம்: சகாரா குரூப் சம்மதம்

Posted By:
Subscribe to GoodReturns Tamil

முதலீட்டாளர்களின் ரூ.24 ஆயிரம் கோடி நிதியை திரும்ப கொடுக்கிறோம்: சகாரா குரூப் சம்மதம்
டெல்லி: மாற்றத்தக்க கடன் பத்திரங்கள் மூலம் சகாரா இந்தியா குரூப்பை சேர்ந்த 2 நிறுவனங்கள் திரட்டிய ரூ.24 ஆயிரம் கோடி நிதியை, முதலீட்டாளர்களுக்கு திரும்ப அளிப்பதாக உச்சநீதிமன்றத்தில் சகாரா குரூப் தெரிவித்துள்ளது.

சகாரா இந்தியா குரூப்பை சேர்ந்த சகாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்ரேஷன் மற்றும் சகாரா வீட்டுமனை முதலீடு நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களும், மாற்றத்தக்க கடன் பத்திரங்கள் மூலம் முதலீட்டாளர்களிடம் இருந்து நிதியை திரட்டியது. ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடிகளால், முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து சகாரா நிறுவனங்களுக்கு எதிராக இந்திய பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பு வாரியம்(எஸ்.ஈ.பி.ஐ), உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கடந்த மாதம் 31ம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப அளிக்குமாறு உத்தரவிட்டது.

மேலும் பாதிக்கப்பட்ட முதலிட்டாளர்களுக்கு 15 சதவீதம் ஆண்டு வட்டியுடன் பணத்தை திரும்ப அளிக்க வேண்டும். 3 மாதங்களில் சகாரா நிறுவனம் நிதியை திரும்ப அளிக்காத பட்சத்தில் சகாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்ரேஷன் மற்றும் சகாரா வீட்டுமனை முதலீட்டு நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களின் சொத்துகளையும், வங்கி கணக்கையும் முடக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

முதலீட்டாளர்களிடம் பெற்று கொண்ட ஆவணங்களையும் சகாரா நிறுவனங்கள் திரும்ப அளிக்க வேண்டும். இது குறித்து நடவடிக்கைகளை மேற்பார்வையிட ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.அகர்வாலை, உச்சநீதிமன்றம் நியமித்தது. இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் சகாரா குரூப் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்றப்பட்ட நிதியை சகாரா குரூப் திரும்ப அளிக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்கான காலஅவகாசத்தை நீட்டித்து அளிக்க வேண்டும் என்று தெரிவித்தது. இதையடுத்து அது குறித்த விசாரணை வரும் 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Will refund Rs.24,000 crore to investors, Sahara tells SC | முதலீட்டாளர்களின் ரூ.24 ஆயிரம் கோடி நிதியை திரும்ப கொடுக்கிறோம்: சகாரா குரூப் சம்மதம்

Sahara Group on Friday assured the Supreme Court that its two companies which had raised Rs.24,000 crore through Optionally Fully Convertible Debentures (OFCDs) from their investors will refund the amount within three months.
Story first published: Sunday, September 30, 2012, 10:06 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns