
இது குறித்து நாஸ்காம் அமைப்பின் கிழக்கு மண்டல மேலாளர் சுபர்னே மேய்த்ரா கூறியதாவது,
மென்பொருள் ஏற்றுமதியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா தொடர்ந்து முன்னணி வகிக்கிறது. இந்திய ஐடி மற்றும் பிபிஓ நிறுவனங்களுக்கான வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது. மென்பொருள் ஏற்றுமதி சந்தையில் அமெரிக்கா 62 சதவீதமும், ஐரோப்பா 28 சதவீதமும் பங்கு வகிக்கிறது. மீதமுள்ள 10 சதவீத தேவையை பூர்த்தி செய்ய ஆப்பிரிக்கா, ஐப்பான், மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றன. இதனால் நாஸ்காம், இப்பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு தொடர்பை வலுப்படுத்தி வருகின்றது.
கடந்த 2012 நிதியாண்டில் இந்திய ஐடி மற்றும் பிபிஓ நிறுவனங்கள் சுமார் 101 பில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டியுள்ளன. அதேபோல மென்பொருள் ஏற்றுமதியின் மூலம் 69 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளன.
இந்தியாவில் மேற்குவங்கத்தில் ஐடி துறையில் பணியாளர்கள் அதிகளவில் உள்ளனர். ஆய்வு, டிசைனிங், பொறியியல், அனிமேஷன் போன்ற துறையில் மனித வளம் சிறப்பாக உள்ளது. மேற்குவங்கத்தின் மனித வளம் சிறப்பாக பயன்படுத்தினால், ஐடி துறையில் முன்னணி மாநிலமாக உருவாக வாய்ப்புள்ளது.
கிழக்கு மண்டலத்தில் மென்பொருள் ஏற்றுமதியில் மேற்குவங்க மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஒடிசா, அசாம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. கடந்த 2011-12ம் ஆண்டு மேற்குவங்கத்தில் இருந்து மொத்தம் ரூ.7,939 கோடி வருமானம் ஈட்டி உள்ளது. இது கடந்த நிதியாண்டை விட 5.85 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications