கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தலைமை செயல் அதிகாரியின் ஊதியம்தான் டாப் சம்பள லிஸ்டில் நம்பர் 2

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நஷ்டத்தில் மிதக்கும் கிங்பிஷர்  ஏர்லைன்ஸின் சிஇஓவுக்கு சம்பளம் மட்டும் ஓஹோ...
டெல்லி: தற்காலிகமாக இழுத்து மூடப்பட்டிருக்கும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சஞ்சய் அகர்வால்தான் விமான நிறுவனங்களிலேயே அதிகம் ஊதியம் பெறும் 2-வது நபர் என்ற பட்டியலில் இருக்கிறார்!

நிதிநெருக்கடியால் சிக்கித் தவிக்கும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், தலைமை செயல் அதிகாரி உட்பட பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்காத காரணத்தால் தற்காலிகமாக தமது சேவைகளை நிறுத்தியிருக்கிறது.

விமான நிறுவனங்களில் கலாநிதி மாறனின் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் நீல் ரெய்மண்ட்டின் ஊதியம் ரூ1.75 கோடியிலிருந்து ரூ4.98 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதற்கு அடுத்த பட்டியலில் இருப்பது கிங்பிஷரின் சஞ்சய் அகர்வால்தான்! இவர் 2010-11ம் ஆண்டில் ரூ2.12 கோடி ஊதியம் பெற்றார். 2011-12ல் இது ரூ4.01 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊதியம் கொடுக்கப்படவில்லை என்பது தனிக்கதை!3-வது இடத்தில் ஜெட் ஏர்வேஸின் சரோஜ் தத்தா... இவரது ஊதியம் ரூ2.11 கோடி.!

விஜய் மல்லையாவின் பல்வேறு குழுமங்களை சேர்ந்த தலைமை செயல் அதிகாரிகளும் போட்டி போட்டிக் கொண்டு ஆளுக்கு பல கோடி ஊதியம் பெற்றிருக்கின்றனர்! ஆனால் ஓராண்டாக பணியாளர்கள்தான் சல்லிப் பைசா இல்லாமல் தத்தளித்து தற்கொலை வரைக்கும் போக நேரிட்டிருக்கிறது என்பதுதான் கொடுமை!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kingfisher CEO gets hefty raise; amongst top-paid airline executives | நஷ்டத்தில் மிதக்கும் கிங்பிஷர் ஏர்லைன்ஸின் சிஇஓவுக்கு சம்பளம் மட்டும் ஓஹோ...

Air carriers may be flying through rough weathers, but their top executives have got handsome pay hikes, including the Chief Executive Officer (CEO) of crisis-ridden Kingfisher Airlines, who has emerged as the second-highest paid among all his peers at the Vijay Mallya-led UB Group. Among the country's three listed airlines also, Kingfisher CEO Sanjay Agarwal's pay package was the second highest in the last fiscal ended March 31, 2012, as per the remuneration details provided in their annual reports.
 
Story first published: Sunday, October 7, 2012, 16:13 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X