ஒபாமாவின் தேர்தல் நிதி "வேட்டை" ரூ. 5 ஆயிரம் கோடியை எட்டுகிறது!

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒபாமாவின் தேர்தல் நிதி
யூயார்க்: அமெரிக்காவின் வரலாற்றில் ஒபாமாவின் தேர்தல் நிதியும் ஒரு சரித்திரமாகப் பதிவாகியிருக்கிறது. அமெரிக்காவில் தேர்தல் நிதியாக 1 பில்லியன் டாலருக்கு மேல் வசூலித்திருப்பதுதான் ஒபாமாவின் புதிய சாதனை!

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடைபெற இருக்கிறது. ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி தேர்தல் வசூல் வேட்டையில் படு தீவிரம் காட்டி வருகிறது. கடந்த மாதம் மட்டும் அதிகபட்சமாக 181 மில்லியன் அமெரிக்க டாலரை வசூலித்துள்ளது அந்த கட்சி. மொத்தம் இதுவரை 947 மில்லியன் டாலர் வசூலாகியிருக்கிறது. அதாவது 1 பில்லியன் டாலரை சுமார் ரூ5 ஆயிரம் கோடியை எட்ட இருக்கிறது ஒபாமாவின் தேர்தல் நிதி! இது அமெரிக்காவின் வரலாற்றில் சரித்திரம்!

 

ஒபாமாவை எதிர்க்கும் குடியரசுக் கட்சியின் மிட் ரோம்னியின் தேர்தல் வசூல் வேட்டை விவரம் வெளியிடப்படவில்லை. ஆனால் ஒபாமாவும் ரோம்னியும் நேருக்கு நேர் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட பின்னர் 2 நாளில் ரோம்னிக்கு 12 மில்லியன் அமெரிக்க டாலர் தேர்தல் நிதி கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Obama and Democrats raise record funds, poll holds steady | ஒபாமாவின் தேர்தல் நிதி "வேட்டை" ரூ. 5 ஆயிரம் கோடியை எட்டுகிறது!

U.S. President Barack Obama's campaign and its Democratic allies raised $181 million in September for his re-election effort, the largest total that either side has announced yet in the 2012 campaign.
 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X