விருதுநகரில் விதிமீறிய 478 பட்டாசு ஆலைகளுக்கு நோட்டீஸ்- 57 ஆலைகளுக்கு 'சீல்'

Posted By:
Subscribe to GoodReturns Tamil

சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டு வந்த 478 பட்டாசு ஆலைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 57 பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த முதலிபட்டி பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் உள்ள 689 பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

இதற்காக வருவாய் துறை, போலீஸ், தீயணைப்புதுறை, சுகாதாரம், தொழில்துறை, மத்திய வெடிபொருள் கட்டுபாட்டு துறை ஆகிய 6 துறைகளை சேர்ந்த அலுவலர்களை கொண்ட 11 குழுக்கள் ஆய்வுகள் நடத்தி வருகின்றன.

மாவட்ட நிர்வாகத்தால் உரிமம் வழங்கப்பட்ட 88 பட்டாசு ஆலைகள், மத்திய வெடி பொருள் கட்டுபாட்டு துறை உரிமம் வழங்கிய 601 ஆலைகள் என்று மொத்தம் 689 ஆலைகளில் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

கடந்த செப் 10ம் தேதி துவங்கி நேற்று வரை 535 ஆலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதில் வெடிபொருள் பாதுகாப்பு சட்ட விதிகளை பின்பற்றாமல் இயங்கிய 57 ஆலைகளின் சல்பர் மருந்து குடோன்களை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். மேலும் 478 ஆலைகளுக்கு பாதுகாப்பு சரியில்லாத காரணத்தால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

57 fireworks factories put seal in Virudhu Nagar | விருதுநகரில் விதிமீறிய 478 பட்டாசு ஆலைகளுக்கு நோட்டீஸ்- 57 ஆலைகளுக்கு 'சீல்'

57 fireworks factories put seal in Virudhu Nagar, after they are caught without security measures. 478 factories got notice to explain about the security measures.
Story first published: Monday, October 8, 2012, 12:47 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns