வத்ரா- டிஎல்எப் நிறுவன பரிவர்த்தனைகள் பற்றி விசாரணை நடத்த முடியாது: ப.சிதம்பரம்

Posted By:
Subscribe to GoodReturns Tamil

ராபர்ட் வத்ரா- டிஎல்எப் டீல் பற்றி விசாரணை கிடையாது: ப.சிதம்பரம்
டெல்லி: சோனியா காந்தியின் மருமகன் வத்ராவுக்கும் டிஎல்எப் நிறுவனத்துக்கும் இடையேயான பரிவர்த்தனைகள் தொடர்பாக விசாரணை நடத்த முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் சிதம்பரம், இரண்டு தனிநபர்களுக்கு இடையேயான பரிவர்த்தனை ஊழல் சட்டத்தின் கீழ் எப்படி விசாரணை நடத்த முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் வத்ரா மீதான புகாரில் இருக்கும் சரி, தவறுகள் என்ன என்பது குறித்து தெரியவும் இல்லை என்று கூறியிருக்கிறார் ப.சிதம்பரம்.

நாளை பதில்- கெஜ்ரிவால்

இதனிடையே வத்ரா விவகாரம் குறித்து டிஎல்எப் தெரிவித்திருக்கும் விளக்கமானது பொய்களால் நிறைந்தது என்றும் இது தொடர்பாக நாளை மாலை 5 மணிக்கு தாம் விளக்கம் அளிக்கப் போவதாகவும் ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்திருக்கிறார் அர்விந்த் கெஜ்ரிவால்.

வத்ரா விவகாரம் குறித்து டிஎல்எப் நிறுவன இயக்குநர்களே கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் வத்ராவோ தம்மீதான புகார்கள் உண்மைக்கு புறம்பானவை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் கெஜ்ரிவால் நாளை என்ன குண்டை வீசப் போகிறாரோ? கதிகலங்கிக் காத்திருக்கிறது காங்கிரஸ் கட்சி!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chidambaram says can't probe DLF deals | ராபர்ட் வத்ரா- டிஎல்எப் டீல் பற்றி விசாரணை கிடையாது: ப.சிதம்பரம்

Union finance minister P Chidambaram on Monday said that government can't probe private deals unless there is specific allegation of quid pro quo.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns