இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்துக்கு கீழே போகும்: ஐஎம்எப் 'அணு குண்டு'!

By Chakra
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்துக்கு கீழே போகும்: ஐஎம்எப் 'அணு குண்டு'!
  நியூயார்க்: இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்று சர்வதேச பொருளாதார நிதியம் (International Monetary Fund) கணித்துள்ளது.

   

  2011ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.8 சதவீதமாக இருந்தது. ஆனால், அடுத்து மானியங்களை அதிகரித்து, கடன் அளவை இந்தியா அதிகரித்துக் கொண்டது. மேலும் அரசியல் நெருக்கடி, கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடியால் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை அமலாக்காமல் தாமதம் செய்ததால் முதலீடுகளும் குறைந்துவிட்டன.

  மேலும் அடுத்தடுத்து வெளிச்சத்துக்கு வந்த ஸ்பெக்ட்ரம், நிலக்கரி ஊழல்கள், பெரும் மின்சாரப் பற்றாக்குறை, வரித்துறை சீர்திருத்தங்களில் தொய்வு ஆகியவையும் அன்னிய முதலீட்டாளர்களை கவலையடையச் செய்துவிட்டன. இதனால் இந்தியாவுக்கு போதிய முதலீடுகள் வரவில்லை.

  இதனால் இப்போது இந்தியாவின் வளர்ச்சி 5.5 சதவீதமாகவே உள்ளது. இந்த நிலைமை மேலும் மோசமாகும். மொத்தத்தில் இந்த ஆண்டு நாட்டின் வளர்ச்சி விகிதம் 4.9 சதவீதமாகவே இருக்கும் என்று ஐஎம்எப் கூறியுள்ளது.

  அதே நேரத்தில் இப்போது வரும் சில்லறை வணிகம், காப்பீட்டுத்துறை, பென்சன் துறை, விமானத்துறைகளில் அன்னிய முதலீட்டை இந்தியா அனுமதிக்க ஆரம்பித்து அதற்கான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. மேலும் பெருமளவு மானியத்தை சாப்பிடும் சமையஸ் கேஸ், டீசல் ஆகியவற்றின் விலையை உயர்த்தி அரசின் செலவை இந்தியா குறைத்துள்ளது.

  இதனால் 2013ம் ஆண்டில், அதாவது அடுத்த ஆண்டில், இதற்கான பலன்களை இந்தியா பெறும் என்றும் ஐஎம்எப் கூறியுள்ளது.

  இப்போதுள்ள நிலையில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் (GDP) 3.8 சதவீதமாக அதிகரிக்கவுள்ளது என்றும் அறிவித்துள்ளது.

  தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

  English summary

  IMF cuts India growth forecast to 4.9% this year | இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்துக்கு கீழே போகும்: ஐஎம்எப் 'அணு குண்டு'!

  India's economic growth rate will shrink to below 5% this year as the government struggles to restore investor confidence, the International Monetary Fund forecast on Tuesday. A new raft of reforms should help the growth rate to bounce back in 2013, the IMF said in its latest World Economic Outlook survey. But the organisation lowered its forecast for 2012 by one percentage point to 4.9%, citing "an expectation that current drags on business sentiment and investment will persist". Although India recorded growth of 6.8% in 2011, it has dipped more recently to around 5.5%, its lowest in three years.
 However the report did say that the government could expect to see growth pick up pace in 2013, albeit a long way short of government expectations.
  Story first published: Tuesday, October 9, 2012, 10:05 [IST]
  Company Search
  Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
  Thousands of Goodreturn readers receive our evening newsletter.
  Have you subscribed?

  Find IFSC

  Get Latest News alerts from Tamil Goodreturns

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more