காவிரி போராட்டத்தால் கர்நாடகாவிலிருந்து காய்கறி வரத்து குறைவு… தமிழகத்தில் விலை உயர்வு

Posted By:
Subscribe to GoodReturns Tamil

காவிரி போராட்டத்தால் கர்நாடகாவிலிருந்து காய்கறி வரத்து குறைவு… தமிழகத்தில் விலை உயர்வு
சென்னை: காவிரி நீர் பிரச்சினையால் கடந்த ஒருவார காலமாக சரக்குப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதை அடுத்து கர்நாடகாவில் இருந்து காய்கறிகள் வருவது தடைபட்டுள்ளது. இதனால் சென்னை, கோவை, மேட்டுப்பாளையம் காய்கறி சந்தைகளில் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து அதிக அளவில் காய்கறிகள் தமிழ்நாட்டுக்கு சப்ளை செய்யப்படுகிறது. தினசரி 100க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் உதகமண்டலம், மேட்டுப்பாளையம், கோவை, சென்னை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

காய்கறி விலை உயர்வு

இந்த நிலையில் காவிரி நதிநீர் பங்கீட்டு தொடர்பாக, தமிழகம் - கர்நாடகத்திற்கு இடையே பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து கடந்த ஒரு வாரகாலமாக சரக்கு மற்றும் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனையடுத்து கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு லாரிகளில் வரும் காய்கறி வரத்து குறைந்தது. சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு தினமும் கர்நாடகாவில் இருந்து 320 லாரிகளில் காய்கறி வரும். கேரட், பீன்ஸ், அவரைக்காய், பீட்ரூட், நூக்கோல், பல்லாரி போன்ற காய்கறிகள் கர்நாடகாவில் இருந்துதான் தமிழகத்திற்கு வருகின்றன. தற்போது வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில், ஒரு கிலோ பீன்ஸ் ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டது. திங்கட்கிழமையன்று அது ரூ.25 ஆக உயர்ந்தது. அதேபோல், அவரைக்காய் ரூ.25-ல் இருந்து ரூ.35 ஆகவும், பீட்ரூட் ரூ.10-ல் இருந்து ரூ.15 ஆகவும், கேரட் ரூ.18-ல் இருந்து ரூ.25 ஆகவும், நூக்கோல் ரூ.12-ல் இருந்து ரூ.15 ஆகவும் அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் போராட்டம் முடிவுக்கு வந்து சரக்கு போக்குவரத்து மீண்டும் தொடங்கினால் மட்டுமே காய்கறி விலை குறையும் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்.

தற்போது, அங்கு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதால், மீண்டும் காய்கறி வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அதிகரிக்கும் பட்சத்தில் காய்கறி விலை குறைய வாய்ப்பு இருக்கிறது'' என்றார்.

கர்நாடகாவில் விலை குறைவு

அதேசமயம் கர்நாடக மாநில சந்தைகளில் காய்கறிகள் தேக்கமடைந்துள்ளதால் அங்கு அவற்றின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. மைசூரில் ஒரு கிலே தக்காளி கிலோ 2 ரூபாயாக குறைந்துள்ளது. பீன்ஸ், வெண்டைக்காய், பீட்ரூட், முள்ளங்கி, முட்டைக்கோஸ் உள்ளிட்டவைகளின் விலை 12 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக குறைந்துள்ளது. காய்கறிகள், பழங்கள் தேக்கம் காரணமாக மாண்டியா, மைசூர், சாம்ராஜ்நகர் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Veggie prices up in TamilNadu | காவிரி போராட்டத்தால் கர்நாடகாவிலிருந்து காய்கறி வரத்து குறைவு… தமிழகத்தில் விலை உயர்வு

Agitation in Karnataka has affected the farmers in that state and buyers in Tamil Nadu as the prices of Veggies go high in Tamil Nadu and the price has come down in Karnataka.
Story first published: Tuesday, October 9, 2012, 12:09 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns