நாடு முழுவதும் ஜி.எம்.ஆர் நிறுவன அலுவலங்களில் வருமான வரித்துறை ரெய்ட்

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ஜி.எம்.ஆர் குழுமம் நாடுமுழுவதும் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு பெங்களூரு தவிர மும்பை, ஐதராபாத், டெல்லி ஆகியநகரங்களில் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர். இதனை ஜி.எம்.ஆர். குழும செய்தித்தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் அர்விந்த் கெஜ்ரிவால் டிஎல்எப், இன்டியா புல்ஸ், ஜி.எம்.ஆர். போன்ற நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் ஜி.எம்.ஆர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications