செக் மோசடி: கிங்ஃபிஷர் விஜய் மல்லையாவிற்கு பிடிவாரண்ட்

Posted By:
Subscribe to GoodReturns Tamil

செக் மோசடி: கிங்ஃபிஷர் விஜய் மல்லையாவிற்கு பிடிவாரண்ட்
பெங்களூரு: கிங்ஃபிஷர் விமான நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையாவிற்கு, பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிங்ஃபிஷர் விமான நிறுவனம், ஜி.எம்.ஆர் நிறுவனத்திற்கு தந்த ரூ.10 கோடிக்கான காசோலை திரும்பியதால், ஐதராபாத் நீதிமன்றம் விஜய் மல்லையா ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து மல்லையா விரைவில் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் டெல்லி விமானநிலையத்தை உபயோகப்படுத்தியதற்காக ஜி.எம்.ஆர் நிறுவனத்திற்கு 40 கோடி ரூபாய் வரை பாக்கி வைத்துள்ளது. இதன் ஒரு பகுதி தொகையாக ஜி.எம்.ஆர் நிறுவனத்திற்கு 10 கோடி ரூபாய்க்கு செக் வழங்கப்பட்டது. ஆனால் வங்கியில் பணம் இன்றி காசோலை திரும்பியது. இது தொடர்பாக ஜி.எம்.ஆர் நிறுவனம் அனுப்பிய நோட்டீசிற்கும் கிங்பிஷர் நிறுவனம் பதிலளிக்க மறுத்துவிட்டது. இதனையடுத்து விஜய் மல்லையாவை கைது செய்ய பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Is Vijay Mallya out of the country to avoid possible arrest? | செக் மோசடி: கிங்ஃபிஷர் விஜய் மல்லையாவிற்கு பிடிவாரண்ட்

A non-bailable warrant (NBW) was issued against Mallya by a Hyderabad court today in a case filed by airport operators GMR. Five more NBWs have been issued in the name of Kingfisher Airlines‘ management.
Story first published: Friday, October 12, 2012, 17:14 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns