காத்து நின்னு போச்சு...தமிழ்நாடு முழுவதும் 12 மணி நேரம் பவர் கட் - சென்னையில் 'ஒன் அவர்'தான்!

By Sutha
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காத்து நின்னு போச்சு...தமிழ்நாடு முழுவதும் 12 மணி நேரம் பவர் கட் - சென்னையில் 'ஒன் அவர்'தான்!
சென்னை: தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி கிட்டத்தட்ட அடியோடு குறைந்து போய் விட்டதால் தமிழகம் முழுவதும் சராசரியாக 12 மணி நேர மின்தடை அமலாக்கப்பட்டு வருகிறது. தலைநகர் சென்னையில் மட்டும் வழக்கம் போல ஒரு மணி நேரம் மட்டுமே மின்சாரம் தடைபடுகிறது.

 

தமிழ்நாட்டுக்கு தினமும் 14 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம்தான் தற்போது உற்பத்தி செய்யப்படுகிறது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் முதல் மற்றும் 4-வது யூனிட்டுகளில் பழுது ஏற்பட்டுள்ளதால் 1050 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அந்த அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இது தவிர காற்றாலை மூலம் கிடைத்து வந்த மின் உற்பத்தியும் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் மின் வெட்டு அதிகரித்து வருகிறது. கடந்த 1 வாரமாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த காற்றாலை மின் உற்பத்தி ஆரம்பத்தில் 4000 மெகாவாட் முதல் 6 ஆயிரம் மெகாவாட்வரை கிடைத்தது. ஆனால் படிப்படியாக கடந்த சில நாட்களாக 2500 மெகாவாட் அளவுக்கு குறைந்தது.

2 நாட்களுக்கு முன்பு வெறும் 200 மெகாவாட் அளவுக்கே காற்றாலை மூலம் மின் உற்பத்தி கிடைத்தது. இரவில் அதிகபட்ச உற்பத்தி 400 மெகாவாட் அளவுக்கு தான் வந்தது. இதனால் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் 12 மணி நேரத்திற்கும் மேல் மின் வெட்டு அமலானது. இதனால் சென்னை தவிர பிற பகுதிகளில் மக்கள் ஸ்தம்பித்துப் போயுள்ளனர்.

கோவை, திருப்பூர், கரூர், போன்ற தொழில் நகரங்களில் 1 மணி நேரத்திற்கு ஒரு முறை மாறி மாறி பகலில் மின் வெட்டு ஏற்பட்டதால் எந்த தொழிற்சாலையும் முழுமையாக செயல்படவில்லை.

இருப்பினும் தலைநகர் சென்னையில் வழக்கம் போல ஒரு மணி நேரம் மட்டுமே மின்சாரம் தடைசெய்யப்பட்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

12 hr power cut in districts, Chennai faces 1 hr cut | காத்து நின்னு போச்சு...தமிழ்நாடு முழுவதும் 12 மணி நேரம் பவர் கட் - சென்னையில் 'ஒன் அவர்'தான்!

12 hr power cut has been in order in TN districts as wind engery comes dows drastically but Chennai faces 1 hr cut.
Story first published: Saturday, October 13, 2012, 9:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X