நிலக்கரி ஊழல்: மேலும் 2 நிறுவனங்கள் மீது எப்.ஐ.ஆர்- நாடு முழுவதும் 16 இடங்களில் சிபிஐ ரெய்ட்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நிலக்கரி ஊழல் தொடர்பாக மேலும் 2 நிறுவனங்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் 16 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.

கடந்த 1993-2004ம் ஆண்டுகளில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் பயனடைந்ததாக கூறப்பட்ட 24 தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிரான விசாரணையை சிபிஐ நடத்தி வருகிறது. இதில் பாஜக ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் (1999-2004) நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 1993ம் ஆண்டு முதல் பாஜக ஆட்சியில் ஆரம்பித்த 2004ம் ஆண்டு வரை நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 24 நிறுவனங்கள் பயனடைந்துள்ளதாக வந்த புகாரை மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் ஆய்வு செய்தது. இந்த ஆணையத்தின் உத்தரவையடுத்து சிபிஐ முதல்கட்ட விசாரணையை கடந்த மாதம் 27ம் தேதி துவக்கியது.

 

இந்த நிலையில் இன்று மேலும் 2 நிறுவனங்களின் சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக ஹைதராபாத், சாட்னா, விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், டெல்லி உட்பட மொத்தம் 7 நகரங்களில் மொத்தம் 16 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

கிரீன் இன்பரா மற்றும் கமலா ஸ்டீல் ஆகிய இரு நிறுவனங்களின் புதிதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலக்கரி ஊழல் தொடர்பாக சிபிஐ தரப்பில் இதுவரை மொத்தம் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coalgate: 2 new FIRs filed, CBI raids in 16 places | நிலக்கரி ஊழல்: மேலும் 2 நிறுவனங்கள் மீது எப்.ஐ.ஆர்- நாடு முழுவதும் 16 இடங்களில் சிபிஐ ரெய்ட்

CBI has registered two fresh cases against two companies for alleged forgery and cheating in connection with its probe in the coal block allocation scam and carried out searches in 16 locations, including Delhi and Hyderabad.
Story first published: Monday, October 15, 2012, 10:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X