மின்நிலைமையை சீராக்க தமிழகத்துக்கு ஜப்பான் ரூ 3.5 ஆயிரம் கோடி கடன்

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தமிழகத்தில் மின்நிலைமையை சீராக்க ஜப்பான் நாடு ரூ3,572 கோடியே 73 லட்சம் கடனாக வழங்க முன்வந்திருக்கிறது.

ஜப்பானைப் பொறுத்தவரையில் இந்தியாவில் 4 திட்டங்களை நிறைவேற்ற மொத்தம் ரூ7,802 கோடியே 17 லட்சம் கடன் வழங்கப்படும் என்று ஜப்பான் கூறியுள்ளது. இதில் ஒன்றுதான் தமிழகத்துக்கான மின்நிலைமையை சீராக்குவதற்கான நிதியும்.

ஜப்பான் கடனுதவியால் பயன் என்ன?

ஜப்பான் கடனுதவியின் மூலமாக வரும் 2017-ம் ஆண்டுக்குள் 16 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தமிழக அரசு உற்பத்தி செய்ய முடியும். தமிழக மின்சார வாரியம் புதிய மின் திட்டங்களை செயல்படுத்த இந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்ளும்.

மாநிலம் முழுவதுமே ஒரே சீரான மின் விநியோகத்துக்காக அனைத்து துணை மின்நிலையங்கள், மின்பகிர்மான இணைப்புகள் அமைக்கப்பட உள்ளது. இதற்கும் இந்த நிதி பயன்படும்.

ஜப்பானின் ஆர்வம் ஏன்?

ஜப்பான் நாடு கடன் வழங்க முன்வந்திருப்பதன் பின்னணி முக்கியமானதாகும். தமிழகத்தில் ஜப்பானிய நிறுவனங்கள் 300-க்கும் மேற்பட்ட அலுவலகங்களையும், தொழிற்சாலைகளையும் வைத்துள்ளனர். இந்த நிறுவனங்கள் சீராக இயங்க மின்சாரம் அவசியம்.

இதனால் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஜப்பான் தொழில் வர்த்தக சபையின் முன்முயற்சில் இந்தக் கடனுதவியை வழங்க ஜப்பான் அரசு முன்வந்திருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Japan commits Rs.7,802.17 cr loan package to India | தமிழக மின்நிலைமையை சீராக்க ஜப்பான் ரூ 3,500 கோடி கடன்

Japan committed 132.645 billion Yen (Rs.7,802.17 crore) as part of the official development assistance (ODA) loan package to fund four development projects in India.
Story first published: Wednesday, October 17, 2012, 12:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X