பிருந்தாவன் உள்ளிட்ட மேலும் 30 ரயில்களிலும் விரைவில் டிவி வசதி

Posted By:
Subscribe to GoodReturns Tamil

சென்னை: ரயில்களில் பயணம் செய்யும் போது டிவி பார்க்கும் வசதி மேலும் 30 ரயில்களுக்கு விரிவாக்கப்படவுள்ளது.

பகல் நேரங்களில் ஓடக்கூடிய ரயில்களில் தொலைக்காட்சி பார்க்கும் வசதி ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை-பெங்களூர், சென்னை-மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகளுக்கு டிவி பார்க்கும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே மற்றும் தென் மேற்கு ரயில்களில் இந்த வசதியை கொடுக்க ரயில்வே துறை திட்டமிட்டு உள்ளது. ரயில் பெட்டிகளில் பெரிய அளவிலான ஸ்கிரின் பொருத்தப்பட்டு அதற்கான டிஷ் மூலம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என்று இதற்கான ஒப்பந்ததாரர் கிரீஷ்குமார் தெரிவித்தார்.

செயற்கை கோள் வசதியுடன் டெலிவிஷன் வசதி மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் உள்பட சில ரயில்களில் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், சென்னை-பெங்களூர் ஏ.சி. டபுள் டக்கர் உள்ளிட்ட ரயில்களில் டெலிவிஷன் வசதி செய்யப்பட உள்ளது. இதன் மூலம் பயணிகள் நடப்பு செய்திகள், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகள் அறிந்து கொள்ளலாம். புதிய சினிமா படங்களும், மாநில குறிப்புகள், சுற்றுலா தொடர்பான விவரங்கள் போன்றவற்றை பயணிகள் தெரிந்து கொள்ளலாம். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து 30 ரயில்களில் டெலிவிஷன் வசதி செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

More trains from Chennai to have satellite TV | பிருந்தாவன் உள்ளிட்ட மேலும் 30 ரயில்களிலும் விரைவில் டிவி வசதி

Passengers will have non-stop entertainment from March next year, by when several Southern Railway and South Western Railway trains will be fitted with satellite television dishes and a wide wide-screen television sets that offer a wide variety of programes.
Story first published: Thursday, October 18, 2012, 17:32 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns