கூட்டுக் குடும்பங்களில் தனித் தனியே சமையல் செய்கிறீர்களா? இதைப் படித்து ரிலாக்ஸ் ஆகுங்கள்!

Posted By:
Subscribe to GoodReturns Tamil

கூட்டுக் குடும்பங்களில் தனியே சமையல் செய்தால் 12 சிலிண்டர் கிடைக்குமாம்!
டெல்லி: நீங்கள் கூட்டுக் குடும்பமாக இருந்தால் தனித் தனியே சமையல் செய்கிறவர்களா? உங்களுக்கு மானிய விலை எத்தனை சிலிண்டர் கிடைக்கும் என்ற கவலையில் இருக்கிறீர்களா? ஜஸ்ட் ரிலாக்ஸ் ப்ளீஸ்..

ஒரு குடும்பத்தினருக்கு 6 சிலிண்டர் மட்டும்தான் மானிய விலையில் வழங்கப்படும் என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்திருந்தது. இது நடுத்தர மக்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது கூட்டுக் குடும்பங்களிலும் எதிரொலித்தது. இந்தக் குடும்பங்களில் தனித் தனியாக சமையல் செய்ய தனித் தனி கியாஸ் இணைப்பு பெற்றிருந்தவர்கள் நிலை என்னவாகும் என்ற கேள்விக்கு பதில் இல்லாமல் இருந்தது.

இது குறித்து சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோக நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், கூட்டுக்குடும்பத்தில் திருமணமான தம்பதிகள் ஒரே வீட்டில் வசித்து வந்தால் அந்த வீடுகளுக்கு மானிய விலையில் 12 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் கிடைக்கும். தனித்தனி சமையல் அறைகளை பயன்படுத்துபவர்களாக இருந்தால் அவர்கள் மற்றொரு கியாஸ் இணைப்பை பெற முடியும். ஒரே வீட்டில் தனித்தனியே சமையல் அறை இருக்கும் விவரத்தை தெரிவித்து விண்ணப்பித்தால் கியாஸ் இணைப்பு வழங்கப்படும் என்றார்.

இத்தகைய வீடுகளை ஏஜெண்டுகள் நேரில் வந்து பார்த்து ஒரே நிறுவனத்திடம் இணைப்பு பெற்றிருக்கின்றன? இவர்கள் சொல்வது போல் தனித் தனி சமையல் அறை உண்டா? அவற்றை பயன்படுத்துகின்றனரா? என்ற விவரங்களை ஆய்வு செய்வர். அவர்களுக்கு ஓகே எனில் உங்களுக்கு 12 சிலிண்டர் கிடைக்குமாம்!

கூட்டுக் குடும்பவாசிகளே. இப்ப ரிலாக்ஸா?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

2 kitchens, 2 connections: Joint family now eligible for 12 LPG cylinders | கூட்டுக் குடும்பங்களில் தனியே சமையல் செய்தால் 12 சிலிண்டர் கிடைக்குமாம்!

In a big respite for those who have a big family and want to balance their kitchen budget, oil marketing companies have come up with ‘two kitchen, two LPG connections’ facility.
Story first published: Monday, October 22, 2012, 15:02 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns