மின்வெட்டு எதிரொலி- பேரல் பேரலாக டீசலை செலவழிக்கும் செல்போன் நிறுவனங்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருநெல்வேலி: தமிழகத்தில் தொடர் மின்வெட்டால் செல்போன் நிறுவனங்கள் பேரல் பேரலாக டீசலை பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த மின்வெட்டு அனைத்து தரப்பினரையும் பாடாய்படுத்தி உள்ளது. அதுவும் செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் நிலைமை பெரும் திண்டாட்டம்தான்!

பி.எஸ்.என்.எல். மற்றும் தனியார் செல்போன் சேவை நிறுவனங்களின் டவர்கள் 24 மணி நேரமும் இயங்க வேண்டியிருக்கிறது. ஆனால் பலமணி நேர மின்வெட்டு இருப்பதால் டவர்களில் வைக்கப்பட்டுளள சக்தி வாய்ந்த இன்வெர்ட்டர்களும் செயல் இழந்து விடுகின்றன. இதனால் அருகிலேயே வைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டர் உதவியுடன் டவர்களை இயக்குகின்றனர். இதற்கு கடுமையான டீசல் செலவு ஏற்படுகிறது.

எந்த பகுதியில் அதிக அளவில் நெட்வொர்க் உள்ளதோ அங்கு விரைவில் டீசல் காலியாகி விடுகிறது. சராசரியாக பயன்பாட்டில் உள்ள ஒரு ஜெனரேட்டருக்கு நாள்தோறும் இரண்டு லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. இதுபோல் ஒரு மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட டவர்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும் தலா 2 லிட்டர் வீதம் செலவு செய்ய வேண்டியது உள்ளது. சராசரியாக ஒரு டவருக்கு மின்கட்டணம் ரூ.20 ஆயிரம் என்ற நிலை மாறி லட்சக்கணக்cuகான ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டன செல்போன் நிறுவனங்கள்!

டீசலுக்குக் கணக்குப் பார்த்தா செல்போன் கம்பெனிகளை விட்டு வாடிக்கையாளர்கள் ஓடிவிடுவார்களே!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: cell phone diesel டீசல்
English summary

Cell phone companies to use barrels of diesel for their towers | பேரல் பேரலாக டீசலை செலவழிக்கும் செல்போன் நிறுவனங்கள்

The cell phone companies to use barrels of diesel to maintain their towers due to the power cut issue.
Story first published: Monday, October 22, 2012, 8:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X