சீன அதிபர் வென் ஜியாபாவோ குடும்பத்தின் சொத்து மதிப்பு 2.7 பில்லியன் டாலர்

Posted By:
Subscribe to GoodReturns Tamil

பெய்ஜிங்: சீன அதிபர் வென் ஜியாபாவோவின் குடும்பத்தின் சொத்து மதிப்பு 2.7 பில்லியன் டாலர் என்று அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்திருப்பதுடன் நியூயார்க் டைம்ஸை அந்நாட்டில் பிளாக் செய்தும் விட்டது.

2002-ம் ஆண்டு சீனாவின் அதிபர் ஆன பிறகு வென்ஜியாபாவோவின் குடும்பத்தினர் சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. வென் ஜியாபாவோவின் மகன், மகள், சகோதரர்கள் என அவரது உறவினர்களின் சொத்து மதிப்பு தற்போது இ2.7 பில்லியன் டாலராகி இருக்கிறது என்பதுதான் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தி.

நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் செய்தி, உள்நோக்கம் கொண்டது என்று சீனாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ சாடியிருக்கிறார்.

இந்த செய்தியால் சீனாவுக்குள் நியூயார்க் டைம்ஸின் ஆங்கிலம் மற்றும் சீன மொழி இணையதளங்களும் தடை செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chinese Premier Wen Jiabao's family amasses assets worth $2.7 billion | சீன அதிபர் வென்ஜியாபாவோவின் குடும்ப சொத்து மதிப்பு 2.7 பில்லியன் டாலர்

A lengthy New York Times expose published on Friday claimed the family of Premier Wen Jiabao has amassed assets worth $2.7 billion through a web of investments, most of it accumulated after he rose to high office in 2002. Chinese censors swiftly blocked the Times' Chinese-language site that carried a translated version of the story, although Internet users with the technical knowledge could still access it by penetrating China's firewall.
Story first published: Friday, October 26, 2012, 16:28 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns