விமான சேவையை மீண்டும் தொடங்குவதற்கான நிதி திரட்டலில் கிங்பிஷர் மும்முரம்

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விமான சேவையை மீண்டும் தொடங்குவதில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மும்முரம்!
பெங்களூர்: நிதி நெருக்கடியில் சிக்கி விமானங்களை இயக்குவதற்கான உரிமத்தை இழந்து நிற்கும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மீண்டும் நிமிர்ந்து நிற்க முயற்சிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.

விமானப் போக்குவரத்து இயக்குநரிடம் கிங்பிஷர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் அகர்வால், விஜய் மல்லையாவுக்கு சொந்தமான இதர நிறுவனங்கள் மூலமாக நிதியைப் பெற்று விமான சேவையை மீண்டும் இயக்க இருப்பதாகக் கூறியுள்ளார்.

கிங்பிஷர் நிறுவனம் ஒரு மாதத்துக்கு சுமார் ரூ20 கோடி வரை ஊதியத்துக்காக செலவிட்டு வருகிறது. ஆனால் கடந்த 7 மாதங்களாக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை. மேலும் கடந்த அக்டோபர் 1-ந் தேதி முதல் எந்த ஒரு விமானத்தையுமே கிங்பிஷர் நிறுவனம் இயக்கவும் இல்லை. இதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் உரிமத்தை தற்காலிகமாக விமானப் போக்குவரத்து இயக்ககம் ரத்து செய்தது.

இதைத் தொடர்ந்து விமானிகளுடன் கிங்பிஷர் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி பாக்கி ஊதியத்தை வழங்குவதாக உறுதி அளித்திருந்தது.

இந்நிலையில் விமான சேவையை தொடர போதுமான நிதியை தாங்களே திடிரட்டிக் கொள்வதாகவும் உரிமத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்று கிங்பிஷர் நிறுவனம் விமானப் போக்குவரத்து இயக்குநரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த முறையாவது வண்டி ஒழுங்காக ஓடுமா?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kingfisher expects to get funds from Mallya's UB group to fly again: sources | விமான சேவையை மீண்டும் தொடங்குவதில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மும்முரம்!

Kingfisher Airlines has reportedly told the civil aviation regulator, Directorate General of Civil Aviation (DGCA), that it is ready to fly the moment the suspension of its flying licence is revoked. The airline, which agreed this week to pay overdue salaries to its staff, will source funding from its own resources to get the grounded carrier flying, the DGCA said on Friday.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X