இரண்டாம் காலாண்டில் அமோகம்... விப்ரோ நிகர லாபம் ரூ1,610 கோடி!

நடப்பு நிதியாண்டின் 2-ம் காலாண்டுக்கான நிறுவனத்தின் நிகர லாபம் இது. கடந்த காலாண்டை விட 18 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த முடிவுகள் குறித்து பெங்களூரில் நிருபர்களிடம் நிறுவன செயல் இயக்குநர், தலைமைச் செயல் அதிகாரி குரியன் கூறியதாவது:
கடந்த நிதியாண்டின் 2-ம் காலாண்டை விட இந்த முறை நல்ல லாபம் ஈட்டியுள்ளது விப்ரோ. கடந்த முறையை விட 18 சதவீதம் கூடுதல் லாபம் கிடைத்துள்ளது.
கடந்த நிதியாண்டின் 2-ம் காலாண்டில் நிகர லாபம் ரூ1,094.37 கோடியாக இருந்தது.
3-ம் காலாண்டில் நிறுவன விற்பனை அதிகரித்து நிகர லாபம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்," என்றார் அவர்.


Click it and Unblock the Notifications