இந்தாண்டு காஸ்ட்லி தீபாவளி: பட்டாசு விலை இருமடங்கு உயர்வு

Posted By:
Subscribe to GoodReturns Tamil

இந்தாண்டு காஸ்ட்லி தீபாவளி: பட்டாசு விலை விர்
கோவில்பட்டி: தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் அரசின் கெடுபிடி விதிமுறைகளால் பட்டாசுகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பட்டாசு விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.

தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை அணிவதும், பட்டாசுகளை வெடிப்பதும் காலம் காலமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் சிவகாசி, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறிய மற்றும் பெரிய பட்டாசு தொழிற்சாலைகள் ஏராளமாக உள்ளன.

தீபாவளி பண்டியைகை முன்னிட்டு ராக்கெட் வெடி, குருவி வெடி, கம்பி மத்தாப்பு, அணுகுண்டு, சங்கு சக்கரம், புஷ்பவனம், சரவெடிகள் மற்றும் பல்வேறு ரக பேன்சி வெடிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. அரசின் கெடுபிடி மற்றும் தொடர் மழையால் பெரும்பாலான பட்டாசு தொழிற்சாலைகள் உற்பத்தியை குறைத்து வி்ட்டன. ஆய்விற்கு செல்லும் அதிகாரிகளின் உத்தரவினால் பட்டாசு ஆலைகளை இயக்குவதிலும், உற்பத்தி செய்வதிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அரசின் கெடுபிடி விதிகளாலும், பட்டாசு உற்பத்தியை உற்பத்தியாளர்கள் குறைத்துவிட்டதாலும் எந்தாண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு பட்டாசு ரகங்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. தீபாவளிக்கு 10 நாட்களே உள்ள நிலையில் சிவகாசி, விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பட்டாசு கடைகள் வைப்பதற்கு உரிமம் பெற்றோர் தங்களது கடைகளில் பட்டாசு விற்பனையை தொடங்கிவிட்டனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Crackers price soar | இந்தாண்டு காஸ்ட்லி தீபாவளி: பட்டாசு விலை விர்

Crackers price in Tamil Nadu has doubled ahead of Diwali. So, people have to squeeze their wallets to buy crackers.
Story first published: Saturday, November 3, 2012, 10:46 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns