உளுந்து, பாசி பருப்பு விலை கடும் உயர்வு

Posted By:
Subscribe to GoodReturns Tamil

உளுந்து, பாசிபருப்பு விலை ரூ200 உயர்வு
விருதுநகர்: விருதுநகர் சந்தையில் உளுந்து மற்றும் பாசிப் பருப்பு விலை மூட்டைக்கு ரூ.200 வரை உயர்ந்துள்ளது. பாமாயில், கடலை எண்ணெய் டின்னுக்கு ரூ.20 அதிகரித்துள்ளது.

பருவ மழை போதிய அளவில் இல்லாததால் பருப்பு விளைச்சல் 40% குறைந்தது. வடமாநிலங்களில் இருந்து பருப்பு வகைகள் வரத்து நின்றதால் தமிழகத்தில் போதிய இருப்பு இல்லை. இதனால் பருப்பு வகைகளின விலை உயர்ந்துவருகிறது.

உளுந்து, பாசி பருப்பு விலை ரூ.200 வரை உயர்ந்துள்ளது. பர்மா இறக்குமதி அவியல் பாசி பருப்பு ரூ.6000லிருந்து ரூ.6200 ஆக அதிகரித்துள்ளது.

கோவில்பட்டி பயிறு ரூ.5200லிருந்து ரூ.5400, கர்நாடக பாசி பயிறு ரூ.5700லிருந்து ரூ.5900, பாசி பயிறு லயன் ரூ.7600லிருந்து ரூ.7800, உடைசல் பருப்பு ரூ.7500லிருந்து ரூ.7700 ஆக அதிகரித்துள்ளது.

நிலக்கடலை பருப்பு விலை ரூ.5500லிருந்து ரூ.5700 ஆகவும் கடலை எண்ணெய் விலை 15 கிலோ டின் ரூ.1750லிருந்து ரூ.1770 ஆகவும் உயர்ந்துள்ளது. பாமாயில் டின் விலை ரூ.820லிருந்து ரூ.840 என உயர்ந்திருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Dal prices increase | உளுந்து, பாசிபருப்பு விலை ரூ200 உயர்வு

Increased to Rs 200 per bag Dal in Virudhunagar Market. Groundnut Oil increase to Rs20 per tin.
Story first published: Sunday, November 4, 2012, 10:17 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns