
மும்பையில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் அதிகாரியான ஓரானா சகிவ் இதைத் தெரிவித்தார்.
கடந்த 2011-12 நிதியாண்டில் இந்தியா- இஸ்ரேல் இடையிலான வர்த்தகம் 500 கோடி டாலராக இருந்தது. இது, தாராள வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்ட பின் குறைந்தபட்சம் 1,200 கோடி டாலராகவும், அதிகபட்சம் 1,500 கோடி டாலராகவும் அதிகரிக்கும் என்று இஸ்ரேல் தூதரகம் அறிவித்துள்ளது.
இந்த இலக்கு அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் எட்டப்படும் என்று தெரிகிறது.
நானோ டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி, சாப்ட்வேர் மற்றும் மரபுசாரா எரிசக்தி ஆகிய துறைகளில் இந்தியாவின் ஒத்துழைப்பை இஸ்ரேல் அதிகம் எதிர்பார்க்கிறது.
அதே போல இந்தியாவுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதை அதிகரிக்கவும் இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
பாலஸ்தீன விவகாரம் காரணமாக இஸ்ரேலுடன் பெரிய அளவில் வர்த்தகம் மேற்கொள்ளாமல் தவிர்த்து வந்தது இந்தியா. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா-இஸ்ரேல் இடையிலான நட்புறவு வலுவடைந்ததையடுத்து வர்த்தகமும் அதிகரித்து வருகிறது.
20 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேல் நாட்டுடனான பரஸ்பர வர்த்தகம் 15 கோடி டாலர் என்ற அளவில் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications