டியூசன் ஃபீஸ் கட்டுகிறீர்களா? இதை படிச்சா பெனிபிட் கிடைக்கும்!

Posted By:
Subscribe to GoodReturns Tamil

சென்னை: உங்களோட குழந்தைகளின் படிப்புக்காக கட்டணங்கள் கட்டுகிறவர்களா? நீங்கள்! இந்த டியூசன் ஃபீஸை வைத்து எப்படி வருமான வரிச் சட்டம் 80c பிரிவின் கீழ் விலக்கு பெற முடியும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்!

குழந்தையின் கல்விக்கு...

உங்களுக்கோ அல்லது உங்கள் மனைவிக்கோ கல்விக் கட்டணம் செலுத்தினால் வருமான வரிக் கணக்கில் விலக்கு கோர முடியாது. அப்படியானால் உங்கள் குழந்தைக்கு கல்விக் கட்டணம் செலுத்தினால் வருமான வரி விலக்கு கோரலாம்

ஸ்பெஷல் கிளாஸ்...

டியூசன் பீஸ் என்பது குழந்தைகளின் ப்ரி நர்சரி மற்றும் நர்சரி கட்டணங்கள்தான்! கல்லூரிகளில் கட்டுகிற கட்டணத்துக்கோ அல்லது ஸ்பெஷல் கிளாஸுக்கு கட்டுகிற கட்டணத்தை வைத்து வருமான வரி விலக்கு கோர முடியாது

பஸ், வேன் கட்டணங்கள்...

குழந்தைகளின் புத்தகங்கள் மற்றும் பஸ், வேன் கட்டணங்களையும் கூட வருமான வரி விலக்குக்கான பட்டியலில் சேர்க்க முடியாது.

இந்தியாவில்தான் இருக்க வேண்டும்...

வருமான வரிவிலக்கு கோரி நீங்கள் கொடுக்கும் குழந்தைகளின் டியூசஸ் பீஸ் கட்டப்பட்ட பள்ளிக்கூடம் இந்தியாவில்தான் இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்

ஆளுக்கு 2 குழந்தைகளுக்கு வரி விலக்கு...

இந்த டியூசன் பீஸ் கட்டணமும் கூட அதிகபட்சமாக ரூ1 லட்சம் வரை அதாவது 2 குழந்தைகளுக்கு மட்டுமே! உங்கள் வீட்டில் 4 குழந்தைகள் இருக்கிறார்களா? கணவன், மனைவி இருவரும் ஆளுக்கு 2 குழந்தைகளின் டியூசன் பியூஸை வைத்து வருமான வரி விலக்கு கோரலாம்!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: tax, வரி
English summary

5 things to remember while claiming tax rebate on tuition fees | குழந்தைகளின் டியூசன் ஃபீஸும் வருமான வரிச் சலுகையும்!

If you are paying school or college fees for your children and wish to claim tax exemption, under sec 80c of the IT Act, here are five things to keep in mind when claiming tax benefits.
Story first published: Tuesday, November 6, 2012, 16:02 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns