
நாட்டில் 4.5 கோடி பேர் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில்(பி.எப்.) கணக்கு வைத்துள்ளனர். ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்திற்கு வேலைக்குப் போகும்போது சிலர் பழைய நிறுவனத்தில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கை முடித்துவி்ட்டு அந்த பணத்தை எடுக்க விண்ணப்பிப்பார்கள். அவ்வாறு விண்ணப்பித்தால் ஒரு மாதத்திற்குள் பணம் கிடைக்கும் என்பார்கள். ஆனால் குறைந்தது 5 முதல் 6 மாதங்கள் கழித்து தான் பணம் கைக்கு வந்து சேரும்.
அந்த 6 மாத காலத்தில் தங்கள் கோரிக்கை எண்ண ஆனது என்பது தெரியாமல் ஒவ்வாரு முறையும் பி.எப். அலுவலகத்திற்கு சென்று விசாரித்து வருவார்கள். இனி அந்த அலைச்சல் தேவையில்லை. ஏனென்றால் பணத்தை எடுக்க விண்ணப்பித்தவர்கள் www.epfindia.com என்ற பி.எப். இணையதளத்திற்கு சென்று தங்கள் கோரிக்கை எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். இது தவிர பணம் கிடைக்க நீண்ட நாட்கள் ஆனால் இதே இணையதளத்திற்கு சென்று உங்கள் குறையையும் பதிவு செய்யலாம்.
இது தவிர வருங்கால வைப்பு நிதி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது போன்ற தகவல்களையும் இந்த இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications