வெளிநாட்டு நிறுவனங்களால் சில்லறை வர்த்தகத்தில் லேசான தாக்கம்தான் இருக்கும்: ரங்கராஜன்

Posted By:
Subscribe to GoodReturns Tamil

வெளிநாட்டு சங்கிலித் தொடர் நிறுவனங்களால் லேசான தாக்கமே இருக்கும்: சி.ரங்கராஜன்
கொல்கத்தா: சில்லறை வர்த்தகத்தில் வெளிநாட்டு சூப்பர்மார்க்கெட் நிறுவனங்கள் வருவதால் சிறு வர்த்தகர்களுக்கு மிகப் பெரிய பாதுகாப்பு ஏற்படாது .. சிறிய அளவிலான தாக்கம்தான் இருக்கும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கின் பொருளாதார ஆலோசகர் சி. ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சங்கிலித் தொடர் சூப்பர் மார்க்கெட்டுகள் இருக்கும் அமெரிக்காவில் சிறு வர்த்தகர்கள் காணாமல் போய்விடவில்லை. சிறிய வர்த்தகர்களைப் பொறுத்தவரை அவர்களது கடைகள் அமைக்கப்பட்டிருக்கும் இடம்தான் அவர்களுக்கான சாதகமான அம்சம். குடியிருப்புகளுக்கு அருகே கடைகள் அமைந்திருப்பதால் பொதுமக்களும் பொருட்களை வாங்குவதற்கான நேரம் என்பதும்கூட அவர்களுக்குத்தான் சாதகமான அம்சம்.

பொதுவாக சிறிய வர்த்தகர்கள் மீது லேசான தாக்கம்தான் இருக்கும். அதனால் அச்சப்படத் தேவையில்லை என்றார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Retail reforms would have limited impact on small retailers: C.Rangarajan | வெளிநாட்டு சங்கிலித் தொடர் நிறுவனங்களால் லேசான தாக்கமே இருக்கும்: சி.ரங்கராஜன்

Prime Minister Manmohan Singh's top economic adviser C Rangarajan has said that the opening of the retail sector to foreign supermarkets in the country would have a limited impact on small players.
Story first published: Sunday, November 25, 2012, 15:53 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns