ஐஐடி மாணவர்களுக்கு ரூ86 லட்சம் வரை ஊதியம்- வலை விரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்

Posted By:
Subscribe to GoodReturns Tamil

ஐஐடிகளில்
மும்பை: இந்திய ஐஐடி நிறுவனங்களில் காம்பஸ் இண்டர்வியூ மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டைவிட 5 முதல் 10% கூடுதலாக ஊதியம் தர முன்வந்துள்ளன.

ஐஐடி நிறுவனங்களில் காம்பஸ் இண்டர்வியூ வேட்டை தொடங்கியிருக்கின்றன. ஃபேஸ்புக், சாம்சங், கூகிள் போன்ற நிறுவனங்கள் இந்தக் களத்தில் இறங்கியிருக்கின்றன. ஐஐடியின் ஒவ்வொரு காம்பஸில் இருந்தும் 150 மாணவர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். முதல் நாளில் சராசரியாக ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் ஊதியம் வழங்க இந்நிறுவனங்கள் முன்வந்திருக்கின்றன.

வழக்கம்போல ஃபேஸ்புக் நிறுவனமானது ஐஐடி கெளகாத்தி கேம்பஸ் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ75 லட்சம் (1,36,000 டாலர்) வழங்க முன்வந்திருக்கிறது. ட்விட்டர் நிறுவனம் 1,10,000 டாலர் வழங்க முன்வந்திருக்கிறது. கலிபோர்னியாவில் உள்ள தமது நிறுவனத்துக்காக கணிதம் மற்றும் கணிணி அறிவியல் படித்த மாணவர்களுக்கு ஃபேஸ்புக் வலை விரித்து காத்திருக்கிறது.

இருப்பினும் ஐஐடி மும்பை மற்றும் சென்னை நிறுவன மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ81.6 லட்சம் தருவதற்கு தர தயாரா இருக்கிறது தென்கொரியாவின் சாம்சங் நிறுவனம். அமெரிக்கா மற்றும் தென்கொரியாவில் உள்ள இதன் அலுவலகங்களுக்கு கணிணி அறிவியல் பட்டதாரிகள் தேவைப்படுவதால் வேட்டைக்கு தயாராக இருக்கிறது.

கூகுளைப் பொறுத்தவரையில் ஆண்டுக்கு ரூ73 லட்சம் தர முன்வந்திருக்கிறது. ஐஐடி மும்பை காம்பஸில் ட்விட்டர், ப்ளாக்ஸ்டோன் உள்ளிட்ட 35 நிறுவனங்கள் காத்திருக்கின்றன. பொதுவாக கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 5-10% வரை கூடுதல் ஊதியம் வழங்க பன்னாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Salaries up 10% for this year's IIT placements | ஐஐடிகளில் "ஊழியர்கள்" வேட்டைக்கு குதித்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்

Placements at the Indian Institutes of Technology seem to have been insulated from the global economic slowdown. Companies like Facebook, Samsung and Google and other foreign majors began Day One of recruitments across IIT campuses, offering about 5-10% higher salaries than last year.
Story first published: Sunday, December 2, 2012, 12:48 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns