வைர ஏற்றுமதியில் ரூ500 கோடி ஊழல்- புது குண்டுபோடும் சிஏஜி

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வைர ஏற்றுமதியில் ரூ500 கோடி ஊழல்- சிஏஜி குற்றச்சாட்டு
டெல்லி: நாட்டின் வைர ஏற்றுமதியில் ஈடுபட்ட நிறுவனங்கள் வங்கிகளில் பெற்ற கடனைத் திருப்பி செலுத்தாமல் ஏமாற்றியதால் ரூ500 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்ப்தாக மத்திய கணக்குத் தணிக்கை துறை (சிஏஜி) தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக சிஏஜியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வைர ஏற்றுமதியில் ஈடுபடும் நிறுவனங்கள் வங்கிகளில் கடன் பெற்றன. ஆனால் அந்த நிறுவனங்கள் கடனைத் திருப்பித் தராமல் போனதால் சுமார் ரூ500 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

477 முன் தொகை மூலம் 40 வைர ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சுமார் ரூ.519 கோடிக்கு வங்கிகள் கடன் வழங்கியிருக்கின்றன. இதில் ரூ278 கோடி மட்டும்தான் திருப்பி கட்டப்பட்டிருக்கிறது. ஹாங்காங்கை மையமாகக் கொண்ட வைர நிறுவனங்களுக்கு 240 அட்வான்ஸ் தொகையாக ரூ170 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. ஒரே நபரே பல நிறுவனப் பெயர்களில் இந்தத் தொகையைப் பெற்று மோசடி செய்திருக்கிறார்.

இது தொடர்பாக இன்சூரன்ஸ் நிறுவனங்களை வங்கிகள் அணுகியபோது, ஏமாற்றிய நிறுவனங்கள் தொடர்பாக தெளிவான விவரங்களைப் பதிவு செய்யாமல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அலட்சியம் காட்டியிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த இன்சூரன்ஸ் நிறுவனங்களை நம்பி கடன் கொடுத்த வங்கிகளே ஏமாந்து கிடக்கின்றன என்று சிஏஜி அறிக்கையைல் கூறப்பட்டிருக்கிறது.

அதெல்லாம் சரிதான்! 2ஜி விவகாரத்தில் ரூ1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக புயலைக் கிளப்பிய விவகாரத்தில் ஆர்.பி.சிங், சிஏஜியின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியிருந்தார். இந்த ரூ500 கோடி இழப்புக்கு எந்த ஆர்.பி.சிங் வரப்போகிறாரோ?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

CAG digs out 500 cr diamond export scam | வைர ஏற்றுமதியில் ரூ500 கோடி ஊழல்- சிஏஜி குற்றச்சாட்டு

A few diamond 'exporters' in league with government banks took loans against their shipments to Hong Kong where the buyers later went untraceable, resulting in the banks losing their advances. The loss in three years was upwards of Rs 500 crore.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X