ஆந்திராவில் ஒரு 'கூடங்குளம்"! ஸ்ரீகாகுளத்தில் அணுமின் நிலையம் அமைக்க கடும் எதிர்ப்பு!

Posted By:
Subscribe to GoodReturns Tamil

ஸ்ரீகாகுளம்: ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் கொவாடா கிராமத்தில் அணுமின் நிலையம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கொவாடா கிராமத்தில் மொத்தம் 6 அணு உலைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. ஒவ்வொரு அணு உலையில் இருந்தும் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

இத்திட்டத்தை செயல்படுத்த சுமார் 10 ஆயிரம் அப்பகுதியிலிருந்து வெலியேற்றப்பட இருக்கின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர்.

ஸ்ரீகாகுளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் மத்திய எரிசக்தி துறையின் முன்னாள் செயலர் ஷர்மா முக்கியப் பங்கு வகித்து வருகிறார். இன்று நடைபெற இருக்கும் கண்டனக் கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்.

'ஜப்பானின் புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பின்னர் ஜெர்மனி போன்ற நாடுகள் சூரிய மின்சகதிக்கு மாறிவரும் நிலையில் நாம்தான் இன்னமும் அணுமின் நிலையத்தை அமைத்து வருகிறோம் என்கிறார் ஷர்மா.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Activists oppose Andhra nuclear power plant | ஆந்திரா: ஸ்ரீகாகுளம் அணுமின் நிலையம் அமைக்க கடும் எதிர்ப்பு

Anti-nuclear activists have urged government to reconsider its decision to set up a nuclear power plant in Andhra Pradesh, saying the proposed project would pose a danger to the life of people.
Story first published: Sunday, December 9, 2012, 11:41 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns