பொருளாதார மந்த நிலை: நாட்டின் ஏற்றுமதி 11% சரிவடைகிறது

நாட்டின் கடந்த ஆண்டு ஏற்றுமதியானது முந்தைய ஆண்டைவிட 21% அதிகரித்திருந்தது. மொத்தம் 30,370 கோடி டாலராக ஏற்றுமதி இருந்தது. ஆனால் நடப்பு ஆண்டில் இந்த உயர்வு சரிவை சந்திக்க இருக்கிறது.
நடப்பு ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் கடந்த ஆண்டைவிட 5.95% ஏற்றுமதி சரிந்திருக்கிறது. ஏற்றுமதியானது 18,920 கோடி டாலராக குறைந்திருக்கிறது.
கிரீஸ், ஸ்பெயின், இத்தாலி நாடுகள் கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்ததும் நாட்டின் ஏற்றுமதி சரிவுக்கு ஒரு காரணம் என்கின்றது ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு.
ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி 9.6% குறைந்துள்ள நிலையில் வட அமெரிக்க நாடுகளுக்கான ஏற்றுமதி ஏற்றம் கண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications