ஜெட் ஏர்வேஸ் பங்குகளை எதிஹாட் ஏர்வேஸ் வாங்குவதாக பரபரப்பு!

கடந்த வாரம் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம், கிங்பிஷர் ஏர்லைன்ஸை வாங்கப் போவதாக தகவல்கள் பரவின. இதனால் பங்குச் சந்தையில் கிங்பிஷர் ஏர்லைன்ஸின் மதிப்புகள் உயர்ந்திருந்தன. ஆனால் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இதனை மறுத்துவிட்டது.
இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குகளை எதிஹாட் ஏர்வேஸ் வாங்கப் போவதாக தற்போது தகவல்கள் பரவியுள்ளன. இதனால் இன்று காலை பங்குச் சந்தையில் ஜெட் ஏர்வேஸ் பங்குகள் 4.7% அதிகரித்திருந்தது. அதே நேரத்தில் கிங்பிஷர் நிறுவனத்தின் பங்குகள் இன்று சரிவை சந்தித்தன.
இருப்பினும் எதிஹாட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்கள் இது பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications