ஜார்க்கண்டிலேயே அதிகமாக வருமான வரி செலுத்திய டோணி

By Siva
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜார்க்கண்டிலேயே அதிகம் டாக்ஸ் கட்டிய டோணி
ஜார்க்கண்ட்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோணி தான் ஜார்க்கண்ட் மாநிலத்திலேயே அதிக அளவு வருமான வரி கட்டியவர் ஆவார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோணி கிரிக்கெட்டில் சம்பாதிப்பதைப் போன்று விளம்பரப் படங்களின் மூலமும் ஏராளமாக சம்பாதிக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிகம் வருமான வரி கட்டிய பெருமை டோணியைச் சேரும். இந்நிலையில் வரும் மார்ச் மாதத்துடன் முடியும் 2012-2013 நிதியாண்டில் அவர் இதுவரை ரூ.12 கோடியை வருமான வரியாக செலுத்தியுள்ளார்.

இது குறித்து வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,

கடந்த ஆண்டு டோணி ரூ.17 கோடி வருமான வரி செலுத்தினார். இந்த ஆண்டு அந்த தொகையை விட அதிகம் செலுத்துவார் என்று நம்புகிறோம். கடந்த 2 ஆண்டுகளைப் போன்று இந்த ஆண்டும் டோணியே ஜார்க்கண்டில் அதிக வருமான வரி செலுத்தியவர் ஆவார் என்று நினைக்கிறோம். ஜார்க்கண்டைச் சேர்ந்த சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் தான் அம்மாநிலத்திலேயே அதிக வருமான வரி செலுத்திய நிறுவனம் ஆகும் என்றார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

MS Dhoni highest tax payer in Jharkhand | ஜார்க்கண்டிலேயே அதிகம் டாக்ஸ் கட்டிய டோணி

Team India Captain Mahendra Singh Dhoni has paid Rs 12 crore income tax so far this fiscal and the department is optimistic that he would accomplish a hat-trick as the highest individual income taxpayer in Jharkhand.
Story first published: Thursday, December 20, 2012, 15:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X