நைஜீரியாவில் ஏர்டெல் அலுவலகம் மீது தற்கொலை படை தாக்குதல்

Posted By:
Subscribe to GoodReturns Tamil

நைஜீரியாவில் ஏர்டெல் அலுவலகம் மீது தற்கொலை படை தாக்குதல்
அபுஜா: நைஜீரியாவில் உள்ள பாரதி ஏர்டெல் மற்றும் எம்டிஎன் ஆகிய அலுவலங்கள் மீது தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தினர்.

நைஜீரியாவில் போகோ ஹராம் என்ற இஸ்லாமிய அமைப்பு அந்நாட்டில் இஸ்லாமிய சட்டங்களை அமல்படுத்தக் கூறி போராடி வருகிறது. அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்ய உதவுவதாகக் கூறி போகோ ஹராம் ஆட்கள் செல்போன் நிறுவனங்களை தாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் அங்குள்ள பாரதி ஏர்டெல் நிறுவனத்தை தகர்க்க தற்கொலைப்படை நபர் ஒருவர் வந்தார். அவர் தாக்குதல் நடந்த வந்ததை அறிந்த பாதுகாவலர் அவரை சுட்டார். அப்போது அவரது உடலில் இருந்த குண்டுகள் வெடித்துச் சிதறின. மேலும் தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய தொலை தொடர்பு நிறுவனமான எம்டிஎன் அலுவலகத்திலும் தற்கொலைப்படை தீவிரவாயினர் தாக்குதல் நடத்தினர்.

தற்கொலைப்படை ஆள் ஒருவர் எம்டிஎன் அலுவலகத்தின் தடுப்பில் காரைக் கொண்டு வந்து மோதினார். இதில் அவர் வைத்திருந்த குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவங்களில் யாரும் உயிர் இழந்ததாக தகவல் இல்லை.

இந்த சம்பவம் குறித்து ஏர்டெல் நிறுவனம் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் அது தனது அலுவலகங்களை வேறு இடங்களுக்கு மாற்றுகிறது என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Suicide bombers attack Airtel office in Nigeria | நைஜீரியாவில் ஏர்டெல் அலுவலகம் மீது தற்கொலை படை தாக்குதல்

Suicide car bombers attacked Airtel office and MTN office at Kano in Nigeria. No casualty has been reported.
Story first published: Sunday, December 23, 2012, 15:30 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns