பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மானியத் தொகை செலுத்தும் திட்டம் நாளை அறிமுகம்

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், நாளை 20 மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். அதுவும் 26 திட்டங்களில் 7 திட்டங்களுக்கான மானியத் தொகை மட்டும் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
இதில் சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய், டீசல், உணவு மற்றும் வேளாண்பொருட்களுக்கான மானியத் தொகை சேர்க்கப்படவில்லை. இதில் தற்போது கடைபிடிக்கப்படுகிற நடைமுறையே பின்பற்றப்படும் என்றார் அவர்.
இரண்டாவது கட்டமாக பிப்ரவரி 1-ந் தேதியன்று 11 மாவட்டங்களிலும் மார்ச் 1-ந் தேதி 12 மாவட்டங்களிலும் இந்தத் திட்டம் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட இருக்கிறது என்றார் அவர்.


Click it and Unblock the Notifications