
2011-ஆம் ஆண்டில் அரிசி ஏற்றுமதியில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்தது. எனினும் 2012-ஆம் ஆண்டில் முதலிடத்தை பிடித்தது. அவ்வாண்டில் மொத்தம் ஒரு கோடி டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது. அதே சமயம் முதலிடத்தில் இருந்து வந்த தாய்லாந்தின் ஏற்றுமதி குறைந்ததால் அந்நாடு இரண்டாவது இடத்திற்கு சென்றது.
உலக சந்தையில் ஓராண்டில் ஏறக்குறைய 3.50 கோடி டன் அரிசி விற்பனையாகிறது. இந்நிலையில் தாய்லாந்தின் ஏற்றுமதி நடப்பு ஆண்டில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்நாட்டில் உபரியாக 1.20 கோடி டன் அரிசி உள்ளதே இதற்கு காரணமாகும். மேலும் ஏற்றுமதி வாயிலான லாப வரம்பு குறைந்து வருவதால் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி குறைய வாய்ப்புள்ளது.
இதனால் 70 லட்சம் டன்னுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட வாய்ப்பில்லை என வேளாண் செலவினங்கள் மற்றும் விலைகள் ஆணையத்தின் தலைவர் அசோக் குலாதி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications