நெல்லையில் மத்திய அரசைக் கண்டித்து அதிமுக தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

Posted By:
Subscribe to GoodReturns Tamil

நெல்லை: மத்திய அரசைக் கண்டித்து அதிமுக தொழிற்சங்கங்கள் சார்பில் நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடந்துது.

காவிரி நடுவர்மன்ற குழுவின் தீர்ப்பை அரசிதழில் மத்திய அரசு வெளியிடாததை கண்டித்தும், மின்சாரம் மற்றும் கூடுதல் நிதியை தமிழகத்திற்கு அளிப்பதில் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதாகவும் கூறி மத்திய அரசிற்கு எதிராக அண்ணா தொழிற்சங்க பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாவட்ட தலைநகரங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பும் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. நெல்லையில் அதிமுக தொழிற்சங்கங்கள் சார்பில் சந்திப்பு ரயில் நிலையம் முன்பு டீசல், சமையல் எரிவாய்வு, ரயில் கட்டண உயர்வு உள்ளிட்டவைகளை கண்டித்து மாநில போக்குவரத்து பிரிவு செயலாளர் பரமசிவன் தலைமையில் நடந்த ஆர்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் நைனார் நாகேந்திரன், ராஜேந்திரன், முத்துசெல்வி, துரையப்பா, இசக்கி சுப்பையா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்திவேல்முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்டம் முழுவதிலும் இருந்து அனைத்து அதிமுக தொழிற்சங்கங்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக் கணக்கான தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆளும் கட்ட்சியான அதிமுகவினரின் ஆர்பாட்டத்தால் நெல்லை மாநகரமே கட்சியினரின் கூட்டத்தால் அலைமோதியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

ADMK protests condemning centre | மத்திய அரசைக் கண்டித்து அதிமுக போராட்டம்

ADMK trade unions protested in Tirunelveli condemning the centre. Thousands of workers attended the protest and raised slogans against centre.
Story first published: Thursday, January 24, 2013, 16:13 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns