நெல்லை மானூரில் உள்ள கடைகளில் புதுப்பட மற்றும் ஆபாசப்பட சி.டி.க்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மானூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் மானூரில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது செல்போன் சர்வீஸ் செய்யும் கடை ஒன்றில் புதுப்பட சி.டி.க்கள் இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் கடையின் உரிமையாளர் ரவிக்குமாரை கைது செய்தனர். மேலும் கடையில் இருந்த கும்கி, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட புதுப்பட சி.டி.க்கள் 566, ஆபாசப் பட சி.டி.க்கள் 35 என மொத்தம் 601 சி.டி.க்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.