டீசல் விலை மாதாமாதம் 40 முதல் 50 பைசா வரை உயரும்: விரப்ப மொய்லி

இது குறித்து அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
டீசல் விலை மாதாமாதம் 40 முதல் 50 பைசா உயரும். அடுத்த உத்தரவு வரும்வரை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் டீசல் விலையை ஒவ்வொரு மாதமும் லிட்டருக்கு 40 முதல் 50 பைசா வரை உயர்த்தலாம் என்றார்.
தற்போது ஒரு லிட்டர் டீசல் விற்றால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.10.80 நஷ்டம் ஏற்படுகிறதாம். எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டம் சரியாகும்வரை மாதாமாதம் டீசல் விலையை சிறிய அளவு உயர்த்த அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிகாரம் அளித்து கடந்த மாதம் 17ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து கடந்த 17ம் தேதி டீசல் விலை லிட்டருக்கு 45 பைசா உயர்த்தப்பட்டது. அடுத்த டீசல் விலை உயர்வு எப்போது என்று மொய்லி தெரிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications