சிடிஎஸ் 2010 செக் வாங்கிட்டீங்களா? ஏப். 1ல் இருந்து பழைய செக் செல்லாது தெரியும்ல

Posted By:
Subscribe to GoodReturns Tamil

பெங்களூர்: செக் மோசடிகளை தடுக்க சிடிஎஸ் 2010 செக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பழைய செக் செல்லாது.

செக் மோசடி பற்றி படித்திருப்பீர்கள். ஆனால் இனி செக் மோசடி செய்ய முடியாது. காரணம் சிடிஎஸ் 2010 செக். அப்படி என்றால் என்னவென்று பார்ப்போம்.

சிடிஎஸ் என்றால் என்ன?

சிடிஎஸ் என்றால் செக் டிரங்கேஷன் சிஸ்டம். அதாவது இத்தனை நாட்கள் வங்கியில் செக் கொடுத்தால் அதை அவர்கள் கொரியர் மூலம் மற்றொரு வங்கிக்கு அனுப்பி அதன் பிறகே உங்களுக்கு பணம் வரும். சிடிஎஸ் முறைப்படி இனி செக்கை ஸ்கேன் செய்து அனுப்பிவிடுவார்கள். அதனுடன் எம்.ஐ.சி.ஆர். பேன்ட், தேதி உள்ளிட்ட விவரங்களும் அனுப்பப்படும்.

சிடிஎஸ் 2010 செக்கின் பயன் என்ன?

சிடிஎஸ் முறையில் செக் மோசடி செய்ய முடியாது. முன்பெல்லாம் செக்கில் ஏதாவது திருத்தம் செய்தால் அது அனுமதிக்கப்படும். ஆனால் சிடிஎஸ் முறையில் செக்கில் திருத்தம் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் அது ஏற்றுக்கொள்ளப்படாது.

சிடிஎஸ் முறைப்படி செக் ஸ்கேன் செய்து அனுப்பி வைக்கப்படுவதால் போக்குவரத்து நேரம் மிச்சமாகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு விரைவில் பணம் கிடைக்கும். செக் தொலைந்து போக வாய்ப்பில்லை.

சிடிஎஸ் 2010 செக் வாங்கிட்டீங்களா?

வங்கிகளில் சிடிஎஸ் 2010 செக் கடந்த ஓராண்டாக கொடுக்கப்பட்டு வருகிறது. சீக்கிரமாக வங்கிக்கு சென்று சிடிஎஸ் 2010 செக் வாங்கிவிடுங்கள். ஏனென்றால் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உங்கள் பழைய செக் செல்லாது.

சிடிஎஸ் 2010 செக் எப்படி இருக்கும்?

சிடிஎஸ் செக்கில் வங்கி கணக்கு எண்ணுக்கு கீழே வாட்டர் மார்க் இருக்கும்.

செக்கின் ஓரத்தில் சிடிஎஸ்-2010 என்று அச்சடிக்கப்பட்டிருக்கும்.

கையெழுத்து போடும் இடம் தெளிவாகத் தெரியும்படி இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Get CTS 2010 cheque before Apr.1: Else face inconvenience | சிடிஎஸ் 2010 செக் வாங்கிட்டீங்களா? ஏப். 1ல் இருந்து பழைய செக் செல்லாது

It is high time to go to your bank and get CTS-2010 cheque book. From april 1 onwards, your old cheques will be considered invalid. CTS-2010 cheque will put an end to frauds.
Story first published: Thursday, February 7, 2013, 12:50 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns