ரிலையன்ஸை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் அதிக மதிப்புள்ள நிறுவனமான டிசிஎஸ்

இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் அதிக மதிப்புள்ள நிறுவனமாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் இருந்து வந்தது. இந்நிலையில் ஐடி நிறுவனமான டிசிஎஸ்ஸின் சந்தை மதிப்பு ரூ.2,83,209 கோடியாக அதிகரித்துள்ளது. இது ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் சந்தை மதிப்பை விட ரூ. 6,523 கோடி அதிகம். ரிலையன்ஸின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 2,76,686 கோடி ஆகும். இதையடுத்து இந்தியாவின் அதிக மதிப்புள்ள நிறுவனமாக டிசிஎஸ் ஆகியுள்ளது.
டிசிஎஸ் பங்குகளின் விலை 1.15 சதவீதம் அதிகரித்ததே இந்த மதிப்பு கூடுதலுக்கு காரணம். அதே சமயம் ரிலையன்ஸின் பங்குகள் 2.63 சதவீதம் குறைந்துள்ளது.
ரூ. 2,75,187 கோடி சந்தை மதிப்புள்ள ஓஎன்ஜிசி மூன்றாவது இடத்திலும், ரூ.2,36,855 கோடி மதிப்புடன் ஐடிசி நான்காவது இடத்திலும், ரூ. 2,21,704 கோடி மதிப்புடன் கோல் இந்தியா 5வது இடத்திலும் உள்ளன.


Click it and Unblock the Notifications