ரயில்வே பட்ஜெட்டில் 100 புதிய ரயில்கள் அறிவிக்கப்படலாம்!

Posted By:
Subscribe to GoodReturns Tamil

ரயில்வே பட்ஜெட்டில் 100 புதிய ரயில்கள் அறிவிக்கப்படலாம்!
டெல்லி: 2013-14ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் 100 புதிய ரயில்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் முக்கியமானதாக ஏசி டபுள் டெக்கர் ரயில்கள் இடம் பெறும் என்று தெரிகிறது.

ரயில்வே பட்ஜெட் வருகிற 26ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார். இந்த நிலையில் ரயில்வே பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

புதிதாக 4200 ரயில் பெட்டிகள் தயாரிப்பது தொடர்பான அறிவிப்பு இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிததாக 670 ரயில்வே என்ஜின்கள் தயாரிப்பது தொடர்பான அறிவிப்பும் வெளியாகலாம். இதுதவிர புதிதாக 176,000 லோகன்கள் தயாரிப்பது தொடர்பான அறிவிப்பும் வெளியாகலாம்.

நாட்டின் அனைத்துப் பிரதேசங்களுக்கும் பயன் தரும் வகையில் அறிவிப்புகள், திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மமதா பானர்ஜி கடந்த காலத்தில் மேற்கு வங்கத்தை மட்டுமே மையமாக வைத்து போட்ட ரயில்வே பட்ஜெட் கடும் அதிருப்திக்குள்ளாகியது என்பதால் இந்த முறை இந்தியாவுக்கான பட்ஜெட்டாக அது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட்டில் புதிதாக 100 ரயில்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 175 ரயி்ல்கள் அறிவிக்கப்பட்டன.

இதுதவிர மேலும் பல புதிய திட்டங்களுடன் ரயில்வே பட்ஜெட் தயாராகி வருவதாக தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: railway, ரயில்வே
English summary

Railway minister likely to announce 100 new trains in Budget | ரயில்வே பட்ஜெட்டில் 100 புதிய ரயில்கள் அறிவிக்கப்படலாம்!

Railways is planning to introduce about 100 trains, including AC double deckers, new passenger services and extension of services to cater to the demands of various states in the Rail Budget 2013-14. As far as rolling stock programme is concerned, the announcement will be made for manufacturing of 4200 new coaches including 600 LHB coaches in the Rail Budget.
Story first published: Thursday, February 21, 2013, 13:19 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns