300% அதிகரித்திருக்கும் சந்தேக வர்த்தக பரிமாற்றங்கள்: நிதி அமைச்சகம் அதிர்ச்சி தகவல்

டெல்லி: கடந்த ஓராண்டில் மட்டும் தீவிரவாத செயல்களுக்கு உதவும் வகையிலான வர்த்தக நடவடிக்கைகள் 300% அதிகரித்திருப்பதாக நிதி அமைச்சகம் எச்சரித்திருக்கிறது.

நிதி அமைச்சகத்தின் புலனாய்வுப் பிரிவு 2011-12ஆம் ஆண்டு தீவிரவாத செயல்களுக்கு உதவும் வகையிலான சந்தேக நடவடிக்கைகள் பற்றிய ஒரு அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது. உளவுத் துறை, ரா அமைப்பு மற்றும் வருமான வரித் துறை போன்றவற்றிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இதில் 2011-12ஆம் ஆண்டில் மட்டும் 1444 சந்தேக வர்த்தக பரிமாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சியான தகவல் என்னவெனில் 2010-11-ம் ஆண்டில் 428 சந்தேக வர்த்தக பரிமாற்றங்கள்தான் நிகழ்ந்திருக்கின்றன. இதை ஒப்பிடுகையில் 300% சந்தேக வர்த்தக பரிமாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

இதேபோல் இந்திய வங்கிகள் மூலமாக கள்ள நோட்டுகளை மாற்றுகின்ற சம்பவங்களும் அதிகரித்திருக்கிறது என்றும் அதில் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+