பிறந்தநாளில் 2 முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த ஒரே நிதியமைச்சர் யார் தெரியுமா?

By Yazhini
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிறந்தநாளில் 2 முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த ஒரே நிதியமைச்சர் யார் தெரியுமா?
பெங்களூர்: மத்திய பட்ஜெட் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்ப்போம்.

 

மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பர் 2013-2014ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த மாதம் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் பட்ஜெட் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் வருமாறு,

1. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1958-1959ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

2. 1973-1974ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இந்தியாவின் ‘கருப்பு பட்ஜெட்' என அழைக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டால் பற்றாக்குறை ரூ. 550 கோடியாக உயர்ந்தது.

3. 1951-52ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த சி.டி. தேஷ்முக் தான் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த முதல் ரிசர்வ் வங்கி கவர்னர் ஆவார்.

4. ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகிய பிரதமர்கள் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.

5. ஆர்.கே சண்முகம் செட்டி தான் முதல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் ஆவார்.

6. ப.சிதம்பரம் 1997-1998ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அது ஒரு கனவு பட்ஜெட்டாக கருதப்பட்டது.

7. மத்திய பட்ஜெட் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்.

8. மொராஜி தேசாய் தான் இதுவரை அதிக தடவை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். அவர் மொத்தம் 10 தடவை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

9. தனது பிறந்தநாளில் 2 பட்ஜெட் தாக்கல் செய்த ஒரே நிதி அமைச்சர் மொராஜி தேசாய். அவர் 1964 மற்றும் 1968 ஆகிய ஆண்டுகளில் தனது பிறந்தநாளான பிப்ரவரி 29ம் தேதியில் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

10. லோக்சபாவில் தான் மத்திய பட்ஜெட் முதலில் தாக்கல் செய்யப்படும்.

11. இந்தியாவின் ஒரே பெண் நிதியமைச்சரான இந்திரா காந்தி 1970ல் இருந்து 1971ம் ஆண்டு வரை நிதித்துறையை கவனித்து வந்தார்.

12. இந்தியா 1947ல் இருந்து இதுவரை 25 நிதி அமைச்சர்களை பார்த்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: budget பட்ஜெட்
English summary

Union Budget: Interesting facts to know | பிறந்தநாளில் 2 முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த ஒரே நிதியமைச்சர் யார் தெரியுமா?

Above are a few interesting facts about the union budget.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X