இந்த ஆண்டு நிதி பிரச்சனை இல்லா ஆண்டாக இருக்க வேண்டுமா?

Posted By: Yazhini
Subscribe to GoodReturns Tamil

இந்த ஆண்டு நிதி பிரச்சனை இல்லா ஆண்டாக இருக்க வேண்டுமா?
பெங்களூர்: இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே வர்த்தக சந்தை மற்றும் பங்கு சந்தை நிலவரம் நன்றாக உள்ளது. இந்த ஆண்டு ஆரம்பமே உங்கள் முதலீட்டு திட்டங்களை தொடங்குவதற்கு சிறந்த நேரமாகும். எனவே நீங்கள் வரவு செலவு மற்றும் வரி சிக்கல்களை பற்றி பின்னர் கவலைப்பட தேவை இல்லை.

பலர் பொருத்தமான நிதி தீர்மானங்களை தேர்ந்தெடுக்கின்றனர் அல்லது பங்குகள் வாங்குகின்றனர். உங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் மற்றும் உங்களின் நீண்ட கால மற்றும் குறுகிய கால குறிக்கோள்களை அடைய உதவும் நிதி தீர்மானங்களை பற்றி நீங்கள் ஏன் நினைக்கவில்லை.

What are the benefits of a loan against property?

நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில நிதி தீர்மானங்கள்

குறிக்கோள்களை அமைத்தல்

ஏதேனும் ஒன்றில் முதலீடு செய்ய அதாவது தங்கம் சேகரித்தல், சொத்துகளில் முதலீடு செய்தல் போன்று ஒவ்வொருவரும் கனவு காண்போம். உங்களின் பொறுப்புகளுக்கு ஏற்ப சரியாக திட்டமிடுங்கள்.

வரி திட்டங்கள்

எல்லோரும் வரியை சேமிக்க நினைக்கின்றனர். எனவே சரியான திட்டங்களை தேர்ந்தெடுத்து அதிக அளவில் உங்களின் வருமானத்தை சேமிக்கலாம்.

கடன் தவணைகள்

நீங்கள் உங்களின் கடன் தவணைகளை செலுத்த தவறினால் அது சிபில் ஸ்கோரில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் பிற கடன் பெறுவதிலும் சிரமம் ஏற்படும். மாதாமாதம் உங்கள் வங்கி கணக்கில் இருந்து கடன் தவணையை எடுக்க வசதியாக போதுமான இருப்புத் தொகை வைத்திருங்கள்.

காப்பீடு/ஓய்வு திட்டம்

காப்பீடு செய்வது உங்களுக்கு நல்லது. அதனால் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் சேர்த்து காப்பீட்டு திட்டம் எடுங்கள்.
நீங்கள் தற்போது தான் சம்பாதிக்கத் துவங்கியுள்ளீர்கள் என்றால் ஓய்வூதிய திட்டத்தில் சேர இதுவே உகந்த நேரம் ஆகும். இப்போதே சேர்ந்தால் பணியில் இருந்து ஓய்வு பெறும் போது பெரும் தொகை கிடைக்கும்.

அவசர நிதி

அவசர தேவைக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைக்கவும். இதனால் அவசர சூழ்நிலையில் வேறு யாரையும் சார்ந்து இருக்க தேவையில்லை.

புத்திசாலித்தனமாக செலவிடுங்கள்

இந்த ஆண்டு தேவையான பொருட்களை வாங்க திட்டமிடுங்கள். அதிகம் செலவிட வேண்டாம்.

முறையாக சேமியுங்கள்

முதலில் சிறு சிறு தொகையாக சேமியுங்கள். அது உங்களின் தேவைகளுக்கு உதவும். ஆரம்ப கட்டங்களில் எஃப்டி அல்லது ஆர்டி, எஸ்ஜ்பி மூலம் சேமிக்கலாம்.

மேற்கண்ட சிறிய விஷயங்களை மனதில் வைத்து செயல்பட்டால் உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Read more about: finance, நிதி
English summary

A few financial resolutions to consider for 2013 | இந்த ஆண்டு நிதி பிரச்சனை இல்லா ஆண்டாக இருக்க வேண்டுமா?

The year has started with a bang, as equities and commodities have rallied since Jan 1. The best time of the year to start your planning is the beginning of the year, so you don't have to worry about budget and tax issues later.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns